எந்த பொம்பளயாவது இதை வெளிய சொல்லுவாளா..? VJ மகேஸ்வரியை விளாசும் பிரபல நடிகர்..!

தொகுப்பாளினியாக இருந்து அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகை மகேஸ்வரி சாணக்கியன். இவரை பொதுவாக வி.ஜே மகேஸ்வரி என்று அழைப்பார்கள்.

சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி தனது கல்லூரி படிப்பிற்கு பிறகு தொடர்ந்து சின்ன திரையில் முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி அப்படியே விஜய் டிவியில் ஒளிபரப்பான புதுக்கவிதை என்கிற சீரியலில் நடிக்க தொடங்கினார்.

2010 இல் பட வாய்ப்பு:

அதே சமயத்தில் நிறைய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார் இதற்கு நடுவே 2010 ஆம் ஆண்டு குயில் என்கிற திரைப்படத்தில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.

அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஜே மகேஸ்வரி. 2022 இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கௌசல்யா என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

2021 இல் வெளியான அம்மன் என்னும் சீரியலில் நடித்திருந்தார். மகேஸ்வரி தொடர்ந்து பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த வகையில் விஜய் டிவியில் பிரபலமாக இருந்து வரும் சில நபர்களில் வி.ஜே மகேஸ்வரியும் ஒருவர் என்று கூறலாம்.

கேள்வி கேட்கும் பயில்வான் ரங்கநாதன்:

இந்த நிலையில் சமீபத்தில் வி.ஜே மகேஸ்வரி வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. அது குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். சமீபத்திய வீடியோ ஒன்றில் வி.ஜே மகேஸ்வரி தன்னுடைய வீட்டில் மது அருந்தும் பார் செட்டப் இருப்பது குறித்து பெருமையாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பயில்வான் ரங்கநாதன் பேசியிருந்த போது ”இந்த ஊரில் எந்த ஒரு பொம்பளையாவது தன் வீட்டில் பார் செட்டப் இருக்கிறது என்பதை பெருமையாக கூறுவாளா? அல்லது வெளியே சொல்லுவாளா? ஆனால் வி.ஜே மகேஸ்வரி இதனை பெருமையாக சொல்லி ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த அவரது மகனின் பள்ளி தோழர்கள் அவரது மகனை இது குறித்து கிண்டல் செய்து இருக்கின்றனர். இதனால் கோபமான அவர் இது குறித்து வி.ஜே மகேஸ்வரிடம் வந்து கேட்டிருக்கிறார். அதற்கு தன்னுடைய மகனிடம் இதெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது கண்ணா என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் வி.ஜே மகேஸ்வரி.

இந்த மாதிரியான கொடுமைகளை எல்லாம் எங்கே கூறுவது என்று கூறி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version