நடிகை சுவலட்சுமியை பத்தி இப்படி சொல்லிட்டாரே..! ரசிகர்களை ஷாக் ஆக்கிய பயில்வான் ரங்கநாதன்..!

90 கால கட்டங்களில் அறிமுகமான நடிகைகளில் எல்லா நடிகைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடவில்லை. சில நடிகைகள் நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட மக்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு பெற முடியவில்லை.

உதாரணத்திற்கு சிம்ரன் தங்கையான மோனல் தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகும் கூட அவருக்கு சிம்ரன் அளவிற்கான மார்க்கெட் என்பது கிடைக்கவில்லை. ஆனால் சினிமாவில் வந்து முதல் திரைப்படத்திலேயே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றவர் நடிகை சுவலட்சுமி.

முதல் படத்திலேயே வரவேற்பு:

தமிழில் அறிமுகமான பொழுதே அவருக்கு ரசிக்கப்பட்டாளம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இவரை குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். பொதுவாகவே பயில்வான் ரங்கநாதன் வீடியோ பேசினாலே அதில் நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை பேசி  மோசமான கருத்துக்களை கூறி வருவார்.

ஆனால் சுவலட்சுமி குறித்து அப்படி எல்லாம் கூறாமல் நல்ல விதமாக கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். 1995ஆம் ஆண்டு தமிழில் அஜித் நடித்து வெளியான ஆசை திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை சுவலட்சுமி.

அதற்கு முன்பே அவர் ஒரு பெங்காலி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை இந்த நிலையில்தான் ஆசை திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து கோகுலத்தில் சீதை கல்கி என்று நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சுவலட்சுமி.

தொடர்ந்து வரவேற்பு:

1995 இல்தான் ஆசை திரைப்படம் வெளியானது. ஆனால் அதற்குப் பிறகு 1999க்குள் நான்கு வருடங்களில் 25க்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார் சுவலட்சுமி. ஆனாலும் சினிமாவில் பல முக்கிய நடிகர்களுடன் நடித்த பிறகும் கூட எந்த நடிகருடனும் கிசுகிசுவில் மாட்டாத ஒரு நடிகையாக இருந்து வந்தவர் சுவலட்சுமி.

சினிமாவிற்கு வந்த காலகட்டத்திலேயே அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. அதில் கவர்ச்சி காட்சிகளும், முத்த காட்சிகளும் இருந்த காரணத்தினால் நிறைய திரைப்படங்களை ஒதுக்கி விட்டார் சுவலட்சுமி. வாய்ப்புகள் கிடைப்பதை தாண்டி அதில் சரியாக நடிக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

இதற்கு இடையே அப்போது பிரபலமாக இருந்த நவரச நாயகன் கார்த்திக் சுவலட்சுமியை தொடர்ந்து காதலித்து வந்ததாக ஒரு பேச்சு உண்டு. ஆனால் சுவலட்சுமி அவரைக் கண்டு கொள்ளவே இல்லையாம். பிறகு ஒரு விஞ்ஞானி ஒருவரை திருமணம் செய்து கொண்ட சுவலட்சுமி தற்சமயம் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் தமிழ் சினிமாவில் ஒழுக்கமாக இருந்த ஒரு நடிகை சுவலட்சுமி என்று கூறி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version