பகாசூரன் – படம் எப்படி இருக்கு..? – திரைவிமர்சனம்..!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி உள்ள பகாசூரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தின் விமர்சனம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய அடுத்த படமாக பகாசுரன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் சதுரங்க வேட்டை நடராஜன் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். செல்வராகவன் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பகாசுரன் படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம்.

என்ன கதை

யூடியூபில் க்ரைம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வரும் ரிட்டையர்டு ஆர்மி மேனன் ஆக நடராஜன் நடித்திருக்கிறார். இவருடைய சொந்த அண்ணன் மகள் ரம்யா என்பவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

ஆனால் இவரை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தியதால்தான் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கேஸ்-ஐ முடிக்கிறார்கள் காவல் துறையினர்.

ஒரு கட்டத்தில் ரம்யாவின் தொலைபேசியை ஆராய்ந்த போது ரம்யா பாலியல் தொழில் ஈடுபட்டு வந்ததும் திருமணம் செய்து கொண்டாலும் நீ இந்த தொழில் ஈடுபடத்தான் வேண்டும் என்று இவரை யாரோ சிலர் மிரட்டுயதையும் தெரிந்து கொள்கிறார் நடராஜன்.

யார் அந்த நபர் என்று தேடும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் அதன் பிறகு பணக்கஷ்டத்தில் இருக்கும் பெண்களை பாலியல் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படும் ஒரு கும்பலை அறிந்து கொள்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க பாலியல் தொழில் பெண்களை ஈடுபடுத்துவதையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களையும் தேடி தேடி கொண்டு வருகிறார் பீமராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய செல்வராகவன்.

இந்த இருவரது கதையும் வேறு வேறு தளங்களில் பயணித்து ஒரு கட்டத்தில் ஒரே இடத்தில் வந்து நிற்கிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதி கதை.

என்ன பண்ணி வச்சிருக்காங்க..

இந்த படத்தில் சுட்டிக் காட்டுவதற்கு நிறைய நிறைகள்சில குறைகள் இருக்கின்றன. அதெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு, உச்சகட்டமாக பெண்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டிருக்கிறார்கள்.

சிலர் பெண்களை அடக்குவதை விடுங்கள்.. ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள் என்று முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் கதைக்கு ஆகாத.. நிதர்சனத்திற்கு ஒத்து வராத சில விஷயங்களை சீரியசாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இது எப்படி இருக்கிறது என்றால்.. நாங்கள் எங்களிடம் இருக்கும் பணத்தை நாலு பேர் பார்க்கும் விதமாக ஊருக்குள் எடுத்துக் கொண்டு சுத்துவோம்.. இந்த பணத்தின் மீது யாரும் ஆசை வைக்க கூடாது.. யாரும் அபகரிக்க முயற்சி செய்யக் கூடாது.. என்று ஊரில் உள்ள அனைவருக்கும் சொல்லிக் கொடுங்கள் என்று கூறுவது போல இருக்கிறது.

ஊரில் உள்ள அனைவர்க்கும் இதை சொல்லிக்கொடுப்பதற்கு பதிலாக நாம் பணத்தை யாரும் பார்க்காத வண்ணம் எடுத்து சென்றுவிட்டால் பிரச்சனை முடிந்தது என்ற நிதர்சனத்தை தான் இந்த படமும் சொல்லி இருக்கிறது.

யாராவது ஒரு நபர் ஒரு ஆயிரம் ரூபாய் பணத்தை நாலு பேர் பார்க்கும் விதமாக எடுத்துச் செல்வார்களா…? கண்டிப்பாக எடுத்துச் செல்ல மாட்டார்கள். காரணம் அந்த பணம் தொலைந்து விடவோ அல்லது திருடப்படவோ வாய்ப்பு இருக்கிறது.

அந்த காரணத்தினால் அதற்காக ஊரில் உள்ள அனைவரும் திருடன் என்று ஆகிவிடாது. அந்த பணத்தை பார்க்கும் 10 பேரில் எட்டு பேர் பணம் வெளியே தெரிகிறது உள்ளே வையுங்கள் என்று கூறுவார்கள். அதில் இரண்டு பேர் அந்த பணத்தை நம்மால் அபகரிக்க முடியுமா என்று யோசிப்பார்கள்.

அந்த இரண்டு பேரில் அதில் ஒருவன் அந்த பணத்தை அபகரித்தே விடுவான். இது தான் நிதர்சனம். அதுபோலத்தான் பெண்களும்.. தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள்

வருமுன் காப்பதே சிறந்தது என்பதுதான் பழமொழி. ஆண் நண்பர், காதலன், பாய் பெஸ்டி என்று பல்வேறு முறைகளில் விழும் சில பெண்கள் தங்களுடைய அந்தரங்கமான விஷயங்களை பகிர்ந்து கொள்வதும் அதன்பிறகு அந்த அந்தரங்கமான விஷயங்களை வைத்து குறிப்பிட்ட நபர்கள் அந்த பெண்களை பணம் கேட்டு மிரட்டுவது அல்லது தங்களுடைய நண்பர்களுக்கும் நண்பர்களின் ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று மிரட்டுவது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனை நாம் பார்த்து வருகிறோம்.

இப்படி இருக்கும் பொழுது.. ஆண்களை நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.. என்று சொல்லி வளர்க்க வேண்டும் என கூறுவது நடைமுறை சாத்தியமில்லாதது. அனைத்து ஆண்களும் இப்படி செய்து கொண்டிருப்பதில்லை. ஒரு சில விஷமிகள் இப்படியான காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.

அப்படியான விஷயங்களிடமிருந்து பெண்களை தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் தற்போதைய தேவை. அவர்களுடைய பாதுகாப்புக்கு உதவக்கூடிய ஒன்று.

அதனை இந்த படத்தில் தெளிவாக காட்டி இருக்கிறார்கள், சலிப்பு தட்டாத திரைக்கதை மற்றும் கதையை நேர்த்தியாக நகர்த்திக் கொண்டு போன விஷயம் என திரையில் தன்னுடைய அனுபவத்தை மெருகேற்றி இருக்கிறேன் என்பதை கண் முன்னாடி காட்டியிருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி அவர்கள்.

குறிப்பாக பெண்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது என்றே கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam