வேற ரகம்.. மிஸ் பண்ணிடீங்களே சூரியா.. வெறித்தனமாக வெளியான வணங்கான் ட்ரெய்லர்..!

திரைப்படங்களைப் பொறுத்தவரை கதை சிறப்பாக இருந்தால் கட்டாயம் ரசிகர்கள் வெற்றி படமாக அந்த படங்களை மாற்றி விடுவார்கள். அந்த வகையில் வணங்கான் திரைப்படம் பற்றி அறிவிப்புகள் வெளி வந்து சூரியா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளாலும் கதையின் போக்கு மாறுவதால் இந்த படத்தை விட்டு சூர்யா விலக இருப்பதாகவும் செய்திகள் கசிந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார் என பாலா அறிக்கை வெளியிட்டார்.

வேற ரகம்..

இப்போது தமிழ் சினிமாவை பொருத்த வரை முக்கிய இயக்குனர்களின் பெயர்களை நீங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் நடிகர் பாலா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஏனென்றால் பாலா படத்தில் நடித்து விட்டால் அந்த நடிகர் மற்றும் நடிகைகள் கட்டாயம் திரை உலகில் உச்சம் பெற்ற நடிகர்களில் ஒருவராக மாறிவிடுவார்கள். இதனை வார்த்தைகளால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்கே அது மிக நன்றாக தெரியும்.

அந்த வகையில் பாலா இயக்க இருந்த வணங்கான் என்ற திரைப்படத்திற்கு சூர்யா 41 என பெயரிடப்பட்டு இரண்டாம் கட்ட படைப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்று சொல்லி வந்த நிலையில் திடீரென படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார்.

இதற்கு காரணமாக பல்வேறு செய்திகள் இணையங்களில் வெளி வந்தது.இதில் இவர்கள் இருவர் மத்தியில் கருத்து வேறுபாடும் சண்டையும் ஏற்பட்டதை அடுத்த தான் இந்த படத்தில் இருந்து விலகியதாக சொல்லி இருந்தார்கள்.

எனினும் இந்தப் படத்தில் நடிக்கும் போது பாலா சூரியாவை டார்ச்சர் செய்து விட்டதோடு மட்டுமல்லாமல் அதிகமாக பணம் பிடுங்கி செலவழித்ததாகவும் பேச்சுக்கள் எழுந்தது. இதை அடுத்து ஒரு கட்டத்தில் இந்த படமே வேண்டாம் என்று சூரியா விளகியதை அடுத்து கோலிவுட் பேசும் பொருளானது.

மிஸ் பண்ணிட்டீங்களே சூரியா..

இதை அடுத்து அதிரடி முடிவில் களம் இறங்கிய இயக்குனர் பாலா என்ற படத்தில் அருண் விஜயை கமிட் செய்தார். ஆனால் அருண் விஜய் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு பாலா சார் டார்ச்சர் செய்து வந்ததாகவும் தன்னிடம் இருக்கும் திறமையை பாலா போன்ற இயக்குனர்களால் தான் வெளி கொணர முடியும்.

அத்தோடு பாலாவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு தனது சிறப்பான நடிப்பை இந்த படத்தில் அருண் விஜய் வெளிப்படுத்தி இருப்பதாக செய்திகள் கசிந்தது.

இதனை அடுத்து அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவருது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் அருண் விஜய் உடல் முழுக்க சேறு பூசிக்கொண்டு ஒரு கையில் பெரியார் மறுகையில் பிள்ளையார் வைத்துக் கொண்டு மிரட்டலான தோற்றத்தில் காட்சியளித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் பிதாமகன் ரேஞ்சுக்கு அருண் விஜய் தற்போது மிரட்டலான லுக்கில் வெறித்தனமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து சூரியாவின் ரசிகர்கள் அனைவரும் இப்படி ஒரு படத்த சூர்யா மிஸ் பண்ணிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வெறித்தனமான வணங்கான் ட்ரெய்லர்..

மேலும் வெறித்தனமான வணங்கான் டிராய்லர் தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

மேலும் இந்த டிரைலரை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் youtube லிங்க் சென்று கிளிக் செய்தால் போதுமானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version