இன்னொருத்தி புருஷனை பங்கு போட்டது என் தப்பு தான்.. நடிகை மௌனிகா ஓப்பன் டாக்..!

1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த உன் கண்ணில் நீர் வடிந்தால் என்கிற படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை மௌனிகா. பொதுவாக பாலு மகேந்திரா ஒரு சிக்கலான இயக்குனர் என்றுதான் கூற வேண்டும்.

சினிமா துறையை பொறுத்த வரை ஒரு சிறப்பான இயக்குனராக பாலு மகேந்திரா அறியப்பட்டாலும் அவரது சொந்த வாழ்க்கை மிகவும் சிக்கலானதாக இருந்தது.

அவருடைய வாழ்க்கையில் மொத்தம் மூன்று திருமணங்களை செய்தார் பாலு மகேந்திரா. முதலில் ஷோபனா என்பவரை திருமணம் செய்தார் அவர் தமிழில் பெரிய நடிகையாக இருந்த பெண் ஆவார்.

மூன்று திருமணம்:

ஆனால் சில காரணங்களால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு அகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருடன் திருமணம் செய்து வாழ்ந்து வந்த காலக்கட்டத்திலேயே அவருக்கு துரோகம் செய்து நடிகை மௌனிகாவையும் திருமணம் செய்து கொண்டார் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திரா மீது திரைப்படங்களில் நடிக்கும் போது காதல் கொண்டார் மௌனிகா. அதனை தொடர்ந்துதான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து மற்ற மனைவிகள் போல் இல்லாமல் பாலு மகேந்திரா இவருடன் 28 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார்.

பிறகு இவர்கள் இருவரும் 2014 ஆம் ஆண்டு பிரிந்தனர். அதன் பிறகு சில வருடங்களில் வயது முதிர்ச்சி காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போனார் பாலு மகேந்திரா. பிறகு அவர் மரணமும் அடைந்தார்.

மனைவியுடன் பிரிவு:

இந்த நிலையில் பாலு மகேந்திரா குறித்து ஒரு விஷயத்தை தனது பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் நடிகை மோனிகா. அதில் அவர் கூறும் பொழுது பாலு மகேந்திரா கடிதம் ஒன்றை நாங்கள் இருவரும் பிரிவதற்கு முன்பு எனக்கு எழுதினார்.

அதில் என்னுடைய வயோதிக சுமையை உன்னிடம் திணிக்க விரும்பவில்லை அதனால் நாம் பிரிந்து விடுவோம் என்று எழுதியிருந்தார். ஆனால் வயோதிகம் காரணமாக இருவரும் பிரிய வேண்டும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.

என்னை யாராவது எதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் தான் என்னை விட்டு அவர் பிரிந்திருப்பார் என்று கூறுகிறார் மௌனிகா. மேலும் பாலு மகேந்திரா இவ்வாறு செய்தது மிகப்பெரிய தவறு என்றும் அதற்காக நான் பாலு மகேந்திராவை மன்னிக்கவே மாட்டேன் அவர் ஆன்மாவை கூட என்னால் மன்னிக்க முடியாது.

இப்போது வரை எந்த காரணமும் என்னிடம் சொல்லாமலே இருந்து விட்டார் என்று கண்ணீருடன் கூறுகிறார் மௌனிகா. அதேபோல அவர் இறப்பதற்கு முன்பு மௌனிகாவிடம் இரண்டு சத்தியம் வாங்கி உள்ளார். ஒன்று திரும்பவும் படத்தில் நடிக்க வேண்டும்.

இன்னொரு சத்தியம் இறந்த பிறகு மௌனிகா இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அதுதான் உனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறி அந்த சத்தியத்தை வாங்கினார் என்று கூறுகிறார் மௌனிகா. ஆனால் அவரது சத்தியத்திற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை இன்னொருத்தருடைய புருஷனை நான் பங்கு போட்டுக் கொண்டது தப்புதான்.

ஆனால் அந்த தப்பான வாழ்க்கையை நான் சரியாக தான் வாழ்ந்தேன் அவருக்கு கொடுக்க வேண்டிய எல்லா மரியாதையும் கொடுத்தேன் அந்த இடத்தில் வேறொரு நபரை என்னால் பொருத்தி பார்க்க முடியாது என்று கூறுகிறார் மௌனிகா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version