ரீ-என்ட்ரி கொடுக்கும் தாமிரபரணி பானு.. ஹீரோ யாரு தெரியுமா..?

நடிகை பானு, கடந்த 2007ம் ஆண்டில் தாமிரபரணி என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

பானு

இந்த படத்தை இயக்குநர் ஹரி இயக்கி இருந்தார். ஹீரோவாக நடிகர் விஷால் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பானு நடித்திருந்தார்.

தாமிரபரணி படத்தில் நடிகர்கள் பிரபு, விஜயகுமார், சம்பத், கஞ்சா கருப்பு, மனோரமா, ரோகிணி உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர்.

மலையாளத்தில் இருந்து பானு, தமிழில் இந்த படத்தில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்துக்கு பிறகு ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சந்தானம் மனைவியாக…

கடைசியாக நடிகை பானு, சந்தானம் ஆர்யா நடித்த சரவணனும் நானும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில், சந்தானம் மனைவியாக நடித்திருந்தார்.

அதன்பிறகு அவர் தமிழ் சினிமாவில் காணப்படவில்லை. ஆனால் சில விளம்பரங்களில் மட்டுமே அவர் அவ்வப்போது காணப்பட்டார்.

தொடர்ந்து மலையாள படங்களில் நடித்த பானு, அங்கும் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு

பெண் குழந்தை பிறந்த நிலையில், அதன்பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்ட துவங்கினார்.

வாய்மை, பாம்பு சட்டை, சகுந்தலாவின் காதலன் போன்ற படங்களில் நடித்தார். மீண்டும் அவருக்கு சினிமாவில் இருந்து இடைவெளி ஏற்பட்டது.

இப்போது 7 ஆண்டுகள் என்ற நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கிறார் நடிகை பானு.

குருவி பாப்பா

இப்போது, குருவி பாப்பா என்கிற படத்தில், முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் பானு. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் வினீத் நடிக்கிறார். வளர்ந்த பிள்ளைகளுக்கு தாயாக, வினீத் மனைவியாக, பானு இந்த படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு மீண்டும் ஒரு ரவுண்டு பானு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ வினீத்

குருவி பாப்பா என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் தாமிரபரணி பானு, மீண்டும் ஒரு ரவுண்டு வர அதிக வாய்ப்புள்ளது.

ஏனெனில் ஹீரோ வினீத் என்பதால் அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version