சினிமாவில் ஜொலிக்கும் நடிகைகள் எல்லா காலங்களிலும் ஒரு போல இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இவர்கள் திரை வாழ்க்கை ஒரு கட்டத்தில் பிரச்சனைகளை சந்திக்க கூடிய வகையிலும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சறுக்குகள் நிறைந்ததாக இருக்கும்.
எனினும் அவற்றையெல்லாம் விடாப்பிடியாகப் விடுத்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே வெற்றிகளை பெற்று என்றும் மக்கள் மத்தியில் புகழோடு இருப்பார்கள்.
அந்த வகையில் நடிகை பானுப்பிரியா தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் சத்தியராஜ் நம்பி ஏமாந்தது பற்றிய பதிவினை இந்த பதிவில் படிக்க இருக்கிறோம். நடிகை பானுப்பிரியா மெல்ல பேசுங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை காட்டியதை தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்ததின் காரணமாக தேசிய விருதும் இவருக்கு கிடைத்தது.
தன்னுடைய துறையில் சிறப்பான முறையில் வளர்ந்து வந்த இவர் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போல ஒரு செயலை செய்து இன்று வரை எழுந்திருக்க முடியாமல் தெருவுக்கு வந்து திணறி வருகிறார்.
மேலும் இவர் மனதில் நடிகையாக இருக்கும் போதே எவ்வளவு வருமானத்தை பார்க்க முடிகிறதே, நாம் ஏன் ஒரு படத்தை தயாரிக்க கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டதன் காரணத்தால் இவர் தயாரித்த சிறையில் பூத்த சின்ன மலர் என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார்.
இந்தப் படம் இவருக்கு நல்ல லாபத்தை பெற்று தந்தது. இதனை அடுத்து இவர் அதே ஆசையை மனதை பல மடங்காக பெருக்கி நடிகர் சத்யராஜ் வைத்து கட்டளை என்ற திரைப்படத்தை தயாரித்தார்.
இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தாலும், படம் எதிர்பார்த்த அளவு வசூல் சாதனையை புரியாமல் தோல்வியை தந்தது. மேலும் இந்த படத்தால் பானுப்பிரியா போண்டியாகி கடன்கள் அதிகமான காரணத்தால் இவருக்கு வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது.
இந்த சூழ்நிலையில் தான் இவர் சீரியல் பக்கம் நடிக்க ஆரம்பித்தார். எனினும் அவருக்கு உரிய வேடங்கள் அதன் பிறகு கிடைக்கவில்லை. எனவே எந்த வேடம் கிடைத்தாலும் சரி என்று நடித்து வரும் இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.