“கணவர் இறந்த பின்பு எல்லாமே மறந்து போகுது.. வெறுமை தான் இருக்கு..” – கலங்க வைத்த பானுப்ரியா..!

நடிகை பானுப்ரியா சமீபத்தில் என்னுடைய நினைவாற்றல் குறைந்துவிட்டது நிறைய விஷயங்களை என்னால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடிவதில்லை என்று பேசி இருப்பது ரசிகர்களுடைய சோக அலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

1980 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை பானுப்ரியா.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் நடனம் ஆடுவதிலும் கை சேர்ந்தவராக இருக்கிறார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு ஆதார் கௌசல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பானுப்பிரியா. இவர்களுக்கு அபிநயா என்ற ஒரு மகளும் இருக்கிறார். கடைசியாக கடைக்குட்டி சிங்கம் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை பானுப்பிரியா.

அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு நினைவாற்றல் குறைந்து விட்டதாக சமீபத்திய பேட்டி கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் நடிகை பானுப்பிரியா.

அவர் கூறியதாவது என்னுடைய கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு என்னுடைய நினைவாற்றல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

எதையும் என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிவதில்லை. மனதில் வெறும் வெறுமை மட்டுமே இருக்கிறது. படப்பிடிப்பு தளங்களுக்கு சென்ற பொழுது அங்கே கூறப்பட்ட வசனங்கள் கூட நொடியில் மறந்து போய்விட்ட சம்பவங்களும் நடந்து இருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறேன் என்று பேசியிருக்கிறார் நடிகை பானுப்பிரியா. இது ஒரு பக்கம் இருக்க நான் என்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டேன் என்று இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. அது உண்மை கிடையாது.

என்னுடைய கணவர் தற்போது உயிருடன் இல்லாததால் அதைப் பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய உடல்நிலை குறித்தும் வதந்திகள் பரவின.

இந்த வதந்திகளை நம்பிய சினிமா சம்பந்தப்பட்ட நண்பர்கள் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். இப்படி என்னை பற்றி உண்மைக்கு புறமான பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தன்னுடைய தனிமையையும் பெருமையையும் போக்குவதற்காக வீட்டில் இருக்கும் வேலைகளை செய்வது பாடல்களை கேட்பது தோட்ட வேலைகளை செய்வது என என்னை நான் பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறேன்.

தற்போது என்னுடைய மகள் லண்டனில் பட்டப்படிப்பு படித்து வருகிறாள் என்று பேசியிருக்கிறார் நடிகை பானுப்பிரியா. ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை பானுப்பிரியா தற்பொழுது தன்னுடைய நினைவாற்றல் குறைந்து வருவதாக பேசியிருக்கும் இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனால் அவருடைய ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.

Summary in English : Fans out there were left heartbroken after popular actress Banupriya revealed in a recent interview that she has been suffering from amnesia for the past two years. This news has left many of her fans in shock, wondering how to cope with this news. Banupriya was known for her strong presence on screen and her captivating performances that had the audience enthralled. It is disheartening to know that something like this has happened to someone so beloved.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version