தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத காமெடிகளில் ஒருவராக இருக்கும் வடிவேலு மதுரையில் இருந்து கிளம்பி வந்த நகைச்சுவை புயல் என்பதால் வைகை புயல் வடிவேலு என்று அனைவரும் அன்போடு அழைத்து வருகிறார்கள்.
இவரைப் பார்த்தாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாய்விட்டு சிரிப்பார்கள். அந்த அளவு தனது பாடி லாங்குவேஜ் இன் மூலம் தனக்கு என்று ஒரு சிம்மாசனம் போட்டு திரையுலகில் அமர்ந்திருக்கிறார்.
நடிகை பாவா லக்ஷ்மணன்..
அந்த வகையில் வடிவேலு திரையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்ததை அடுத்து தற்போது மீண்டும் நடிப்பில் களை கட்டி வருகிறார். மாமன்னன் திரைப்படத்தில் இவரது நடிப்பை சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் ரசிகர்களின் மத்தியில் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று தந்தது. எனினும் தனது இரண்டாவது இன்னிங்சில் களைகட்டி வரும் இவர் பற்றி சில விஷயங்களை பாவா லட்சுமணன் பகிர்ந்து இருக்கிறார்.
வடிவேலுவும் ஆரம்ப காலத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த அளவு முன்னேறி இருப்பதாகவும் சினிமாத்துறைக்குள் நுழைய பல்வேறு கஷ்டங்களை பட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
வைகைப்புயல் வடிவேலு கேப்டன் விஜயகாந்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி தந்து என்று உச்சகட்ட காமெடியன்களில் ஒருவராக திகழும் இவர் நகைச்சுவை கேரக்டர்களை செய்வதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாக படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
வடிவேலுவை இன்றுள்ள காமெடியன்கள் விமர்சிப்பது ஏன்?
மேலும் வடிவேலு உடன் இணைந்து நடிக்கும் காமெடியன்களை தன்னை விட யாரும் அதிக அளவு நடித்து அந்தப் படத்தில் அந்த காட்சியில் பெயர் பெற்றுவிடக் கூடாது என்பதில் குறிக்கோளாக இருக்கக்கூடிய அற்ப குணம் படைத்தவராக சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் தன்னை திரையுலகில் இந்த அளவு உயர்த்தி விட காரணமாக இருந்த கேப்டன் மரணம் அடைந்ததை அடுத்து அவரது இறுதி அஞ்சலிக்கு கூடி செல்லாத நன்றி கெட்ட மனிதராக சித்தரித்து பேசி இருக்கிறார்கள்.
எனினும் வடிவேலுவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று பேசி இருக்கும் பாவா லட்சுமணன் வடிவேலு பற்றி எழுந்து வரும் விமர்சனங்கள் பற்றி தனது நிலைப்பாடை தெரிவித்திருக்கிறார். மேலும் வடிவேலு காமெடிகளை அவர் எப்போதும் ரசித்துப் பார்ப்பதாக சொல்லி இருக்கிறார்.
ஓபன் டாக்..
குறிப்பாக வடிவேலு மற்றும் விவேக்கின் காமெடிகள் சிறப்பாக இருக்கும் என்று சொன்ன அவர் வண்டு முருகன் கேரக்டரை மிகவும் நேர்த்தியான முறையில் செய்து காட்டியதோடு அவரைப் பற்றி புகழ்ந்து இருக்கிறார்.
அவரோடு இணைந்து நடித்த படங்களில் பஸ்ஸில் ஒரு சீன் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சீனை அவரை எனக்கு நடித்துக் காட்டுகிறதை அடுத்து நான் அதே போல் செய்து மிகப்பெரிய அப்லாசை ரசிகர்களின் மத்தியில் பெற்றது.
வடிவேலு தன்னோடு நடிக்கும் சக நடிகர்களுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்கக்கூடிய தன்மை கொண்டவர். அவரோடு இணைந்து நடித்த குண்டு சுமதி, பிரியங்கா போன்றவர்கள் நல்ல பெயரை பெற்றிருக்கிறார்கள்.
எப்படியாவது மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதை பற்றிய சிந்தித்து வரக்கூடிய இவர் ஒரு மிக நல்ல கலைஞர். எனினும் தற்போது பலரும் இவரை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு காரணம் நாய் சேகர் படத்தில் பழைய ஆட்கள் யாரும் வர வேண்டாம் என்று சொன்னது தான்.
வெறும் பேச்சோடு வடிவேலு நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர் மீடியாக்களில் இதை சொல்லிவிட்டார். இதனால் தான் இவர் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் புதிய டீம்மை சேர்த்துக்கொண்ட நடித்த இப்படம் பிலாப்பானது.