பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய ஒரு பேட்டியில் பார்ப்பனர்களை எவ்வளவு திட்டினாலும் கோபம் வராது அதற்கு என்ன காரணம்..? என்று தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அவர் கூறியதாவது, பிராமணர்களுடைய நோக்கம் முழுதும் அறிவை பெறுவதில் மட்டும்தான் இருக்கிறது. பெற்ற அறிவை பயன்படுத்துவது.. மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது.. இது மட்டும் தான் அவர்களுடைய முதன்மையான நோக்கமாக இருக்கிறது.
அந்த நோக்கத்தில் அவர்கள் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றாலும் கூட உயர்ந்த பொறுப்புகளில் அவர்கள் இருப்பதற்கு காரணம் அவர்களுடைய அறிவு தான்.
இட ஒதுக்கீடு கொடுத்தாலும் நம் ஆட்களால் படிக்க முடியாது.. அப்படியே படித்தாலும் மிகவும் சிரமப்பட்டு படிப்பார்கள்.. ஆனால் பிராமணர்கள் படிப்பதை அவ்வளவு எளிமையாக செய்யக்கூடியவர்கள்.
அவர்களுடைய கற்றல் திறன் அதிகமாக இருப்பதற்கு காரணம் அவர்கள் கற்றலை தவிர தங்களை எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். தங்களுடைய கவனத்தை சிதற செய்யக்கூடிய எந்த விஷயத்திலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள்.
வெளிநாடுகளுக்கு அதிகமாக பயணம் செய்யும் நபர்கள் யார் என்று பார்த்தால் அது பிராமணர்களாக தான் இருப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் வெளிநாடுகளில் அரசாங்கத்திலிருந்து.. அரசாங்க நிறுவனங்கள்.. தனியார் நிறுவனங்கள்.. என பிராமணர்களை மிகப்பெரிய பொறுப்பில் தேடிப் பிடித்து அமர வைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அவர்களிடம் அந்த வேலையை கொடுத்தாலும் பதறாமல் எடுத்த காரியத்தை கச்சிதமாக முடிப்பார்கள் என்ற நம்பிக்கை உலகம் முழுதும் இருக்கிறது. எனவே அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தாலும் இல்லை என்றாலும் பிரச்சினையே கிடையாது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பல பிராமணர்கள் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகள் அமைச்சராக கூட ஆகியிருக்கிறார்கள். அவர்களை கோபப்படுத்துவது என்பது மிகவும் கடினமான விஷயம்.
நீங்கள் அவர்களுடைய சமூகத்தை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள். அவர்கள் அதை கண்டுகொள்ள கூட மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மாமிசம் சாப்பிடுவது கிடையாது.. அதிகமாக காரம் இருக்கக்கூடிய காய்கறிகள் வெங்காயம், பூண்டு ஆக்கிவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
எனவே அவர்களுக்கு கோபம் வருவது என்பது கடினமான விஷயம். இன்னொரு விஷயம் கவனிக்க வேண்டும்.. தங்கள் வீட்டை, சுற்றுப்புரத்தை எப்போதும் 100% சுத்தமாக வைத்திருக்க கூடியவர்கள் பிரமாணர்கள்.
உதாரணதிற்கு, நன்கு கவனித்து பார்த்தீர்கள் என்றால்.. நம்முடைய வீடு சுத்தமாக இருக்கும் போது நம் மனநிலை தெளிவாக இருக்கும்.. ஒரு முழுமையான உணர்வை கொடுக்கும்.. அதுவே குப்பை கூளமாக இருக்கும் போது நம்முடைய மனநிலை குழம்பி போய்.. இருக்கும் நாமும் எதையோ இழந்தது போலவே இருப்போம்.. இதை நாம் பலரும் உணர்ந்திருப்போம்.. ஆனால், பிராமணர்கள் எப்போதும் தங்கள் வீடு, சுற்றுப்புறம் என அனைத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வதால் அவர்களுடைய மனநிலை தெளிவாக இருக்கின்றது.
என்று அப்படியே அவர்களுக்கு கோவம் வந்தாலும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று கடந்து விட்டு சென்று விடுவார்கள் தவிர அவர்கள் தங்களை திட்டுபவர்களிடமும் மோசமாக பேசுபவர்களிடமும் தங்களைப் பற்றி விளக்கம் கொடுத்து கொண்டிருக்க மாட்டார்கள்.
பிராமணர்களை இழிவாக பேசி ஒரு நாட்டையே கூட ஜெயிக்கலாம்.. ஆனால் ஒரு நாளும் பிராமணர்களை ஜெயிக்க முடியாது என்பது தான் என்னுடைய கருத்து. பார்ப்பன பெண்கள், இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கை துணையை தேர்வு செய்வதிலும் அவ்வளவு பொறுப்பாக இருப்பார்கள்.
நல்ல மனிதராக, பொருளாதாரத்தில் உயர்ந்த மனிதராக, நல்ல அறிவான நபரை தான் பார்ப்பன பெண்கள் தங்களுடைய துணையாக தேர்வு செய்வார்கள். அதே போல இளைஞர்கள் தங்களுடைய கவனம் முழுதையும் படிப்பின் மீது வைத்திருப்பார்கள்.
பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை சமாச்சாரங்களில் அதிகமாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். விதண்டாவாததிற்கு பேசினால் கூட.. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பிராமணர்கள் அப்படி இருக்கலாம் தவிர ஒட்டுமொத்த சமூகமாக பார்க்கும் பொழுது அவர்கள் இப்படியான பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்த்து விடுவதும்.. வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதையும் இயல்பாகவே வைத்திருக்கிறார்கள்.
இதுதான் பிராமணர்களுக்கு கோபம் வராமல் இருப்பதற்கான காரணம் எனவும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து, சொந்த அனுபவம் என்றும் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.