நெப்போலியன் மகன் பிரம்மாண்ட திருமணம்.. மருமகள் அக்சயா மாஸ்டர் பிளான்.. அலர்ஜியால் அரேங்கேரிய சோகம்…!

தமிழ் திரை உலகில் ஒரு மாஸ் வில்லனாகவும், ஹீரோவாகவும் தனது நடிப்பின் மூலம் பக்குவமாய் ரசிகர்களை கவர்ந்த நடிகர் நெப்போலியன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

சீவலப்பேரி பாண்டி திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர் திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர்.

நெப்போலியன் மகன் பிரம்மாண்ட திருமணம்..

நடிகர் நெப்போலியன் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை அதிகளவு பெற்று இருந்த போதும் இவரது மூத்த மகன் தனுஷுக்கு ஏற்பட்ட தசை சிதைவு நோயால் தொடர்ந்து திரைப்படங்களை நடிக்க முடியாமல் போனதோடு மட்டுமல்லாமல் அரசியலில் இருந்து விலகி இந்தியாவை விட்டு அமெரிக்காவில் குடியேறினார்.

இதனை அடுத்து தனது மூத்த மகனது நோய்க்கு தீர்வு காண ஆரம்பத்தில் ஆங்கில மருத்துவத்தை நம்பிய அவர் பின் நாளில் திருநெல்வேலியில் இருக்கும் பாரம்பரிய மருத்துவமனைக்குச் சென்று ஓரளவு நோயின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்ததை அடுத்து அமெரிக்காவில் படிக்க வைத்தார்.

இந்நிலையில் தற்போது தனது மூத்த மகன் தனுஷுக்கு திருநெல்வேலியில் வசித்து வரும் இவர் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பெண் எடுத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர்களது நிச்சயதார்த்தம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடந்தது.

இந்த திருமணம் நிச்சயதார்த்தத்தில் இவரது மகன் திருநெல்வேலிக்கு வந்து கலந்து கொள்ள முடியவில்லை. இதற்கு என்ன காரணம் என்று பலரும் பல்வேறு வகைகளில் கேள்விகளை எழுப்பி இருந்தார்கள்.

மருமகள் அக்ஷயா மாஸ்டர் பிளான்..

தன் மகனுக்கு ஏற்ற பெண்ணை அமெரிக்காவில் தேடாத நெப்போலியன் நமது தமிழகத்தில் இருக்கும் திருநெல்வேலியில் இருந்து சில மைல் தூரம் இருக்கும் மூலக்கரைப்பட்டி என்ற இடத்தில் பெண் பார்த்து பெரியவர்களால் தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

அப்படி அந்த பெண்ணை தேர்ந்தெடுக்கக்கூடிய சமயத்தில் தனுஷும் அந்தப் பெண் அக்ஷயாவும் வீடியோ கான்பரன்சில் பேசிக் கொண்டதை அடுத்து தனக்குள் இருந்த சந்தேகத்தை முழுமையாக தனுஷிடம் பேசி தெளிவு பெற்றதை அடுத்து திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாக பயில்வான் கூறியிருக்கிறார்.

அலர்ஜியால் அரங்கேறிய சோகம்..

நெப்போலியன் மகன் தனுஷுக்கு விமான பயணம் அலர்ஜியாக இருந்த காரணத்தால் தான் அவர் வராத நிலையில் திருநெல்வேலியில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்ற உண்மை தகவலை சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து தனது மகனின் முதல் திருமண பத்திரிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கி தான் எப்போதுமே திமுக தான் என்பதை நெப்போலியன் சிறப்பான முறையில் நிரூபித்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த திருமணம் அமெரிக்கவில் நடக்குமா? அல்லது சென்னையில் நடக்குமா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன் அப்படி திருமணம் சென்னையில் நடக்கக்கூடிய வகையில் இருந்தால் கப்பல் பயணத்தை மேற்கொண்டு தான் மாப்பிள்ளை வரவேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறார்.

இந இந்த விஷயமானது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருவதோடு நெப்போலிகளின் மகனோடு பிரம்மாண்ட திருமணத்திற்கு தற்போது இருந்தே வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் இந்த விஷயத்தை தெறிக்கவிட்டு விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version