மன நோயாளி.. கிரிமினல்.. அவரை பத்தி அப்படி பேச கூடாது.. பயில்வான் ரங்கநாதன் பதிலடி..!

தமிழ் திரையுலகை உலுக்கி இருக்கக் கூடிய விஷயங்கள் ஒன்றாக தற்போது பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் இந்த பேட்டியில் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் முதல் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த குந்தவை வரை படுமோசமாக பாடகி சுசித்ரா பேசியிருக்கிறார்.

மனநோயாளி.. கிரிமினல்..

சில நாட்களாகவே இணையங்களில் பாடகி சுசித்ராவின் பேட்டிகள் பரவலாக வெளி வந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், அண்மை பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் குறித்து வறுத்து எடுத்து இருக்கும் சுசித்ராவின் பேச்சு இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

இந்நிலையில் பாடகி சுசித்ராவிற்கு பதிலடி தரக்கூடிய வகையில் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் பாடகி சுசித்ராவை வைத்து செய்துவிட்டார் என்று சொல்ல கூடிய வகையில் பேட்டி இருந்தது.

மேலும் அந்த பேட்டியில் சுசித்ராவை கிரிமினல் எனவும் மனநோயாளி எனவும் கூறி இருக்கும் பயில்வான் ரங்கநாதன் அவரது எக்ஸ் கார்த்திக் ஆடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவரைப் பற்றி பேசக்கூடாது..

ஏற்கனவே கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கும் பாடகி சுசித்ராவை சோசியல் மீடியாவில் இருக்கும் தனுஷின் ரசிகர்கள் பலரும் அவரை திட்டி தீர்த்து வரும் நிலையில் தனுஷ் பற்றி மோசமான கருத்தினை சொல்லியதோடு மட்டுமல்லாமல் தன் கணவரோடு இணைந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறாரா? என்ற சந்தேகத்தை மோசமாக கிளப்பினார்.

அத்தோடு நின்று விடாமல் நடிகர் கமலஹாசன் வைக்கும் பார்ட்டியில் போதை பொருட்கள் வழங்கப்படுவதாக பேசியதோடு மட்டுமல்லாமல் தனுஷ் மற்றும் அவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா குறித்தும் அவர்கள் பிரிவு குறித்தும் மோசமாக விமர்சித்ததோடு பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

பயில்வான் ரங்கநாதன் பதிலடி..

இதனை அடுத்து பயில்வான் ரங்கநாதன் பற்றியும் அவர் தான் தமிழ் சினிமாவில் பிட்டு படங்களை அறிமுகம் செய்து வைத்தது குறித்தும் பேசிய பாடகி தன்னைப் பற்றி அவதூறு செய்திகளை கார்த்திக் குமார் மற்றும் தனுஷோடு சேர்ந்து வெளியிட்டு இருப்பதாக பதிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் பாடகி சுசித்ரா மன நோயாளி, கிரிமினல் என சொல்லி இருக்கும் பயில்வான் ரங்கநாதன் பாடகி சுசித்ரா சொல்லுவது அனைத்துமே பொய். அதில் உண்மை இல்லை அவர் பேசியதற்காக நான் வழக்கு தொடர போகிறேன் என கூறியிருக்கிறார்.

விவாகரத்துக்கு பிறகு தன் முன்னாள் கணவர் பற்றி பேசுவதற்கு எந்த உரிமை இல்லாத நிலையில் சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து இது போன்ற பேச்சுக்களில் ஈடுபட்டு வரும் சுசித்ரா மீது வழக்கு பாய்ந்து விடுமோ என பயந்து மனநோயாளி எனக் கூறி தப்பித்து வருகிறார்.

அத்தோடு youtube பேட்டிகளில் தொடர்ந்து சாபம் விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு தனக்கு போன் செய்து பேசிய போது எல்லாவற்றையும் மறந்து மன்னிச்சிடுங்க என்று கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து பேட்டி கொடுப்பதாகவும் கூறினார்.

மேலும் எதற்கு வீண் வேலை என்று நான் அவரை அழைத்து பேட்டியினை வெளியிட மறுத்ததை அடுத்து கோபத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசி வருகிறார்.

அப்படி பேசுவது சட்டப்படி குற்றம் என்பது அவருக்கு தெரியவில்லை போலும் என பயில்வான் ரங்கநாதன் பாடகி சுசித்ராவை விளாசித் தள்ளி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version