நடிகை சதாவுக்கு அந்த கெட்ட பழக்கம் உண்டு.. மார்க்கெட் இழந்த காரணம் இது தான்.. போட்டு உடைத்த நடிகர்..!

நடிகை சதா மராட்டி மொழியை தாய் மொழியாக கொண்டவர். எனினும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த ஜெயம், எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, எலி போன்ற திரைப்படங்கள் இவரது பெயரை இன்றும் சொல்லக் கூடிய வகையில் உள்ளது.

நடிகை சதா..

அதிலும் ஜெயம் திரைப்படத்தில் போயா போ என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை நடிகை சதா பிடித்து விட்டார்.

திரைத்துறையில் நடிக்கும் பல நடிகைகளும் பல்வேறு கெட்ட பழக்கங்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த வரிசையில் நடிகையர் திலகம் சாவித்திரி முதல் தற்போது நடிக்கும் பல நடிகைகளும் மதுவுக்கு அடிமையாகி சீரழிந்த விஷயங்கள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் மூத்த பத்திரிக்கையாளரான திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதர் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்கங்களை தோலுரித்துக் காட்டக்கூடியவர்.இவர் சதா குறித்து பேசி இருக்கும் விஷயம் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளி வந்த ஜெயம் படத்தில் நடித்து அறிமுகமான நடிகை சதா குடும்பப் பாங்கான பெண்ணாக திரைப்படங்களில் நடித்து அசத்தியவர்.

முதல் படத்தில் இழுத்துப் போர்த்தி நடித்த இவர் ஷங்கர் இயக்கிய படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலுக்காக சற்று ஓவராக கவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.

இந்நிலையில் பல படங்களுக்குப் பிறகு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக் கூடிய இவர் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்வார்.

சதாவுக்கு கெட்ட பழக்கம் உண்டா..

அஜித், மாதவன் என முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவருக்கு மார்க்கெட் இல்லாமல் போனதால் எலி திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்தார்.

எப்படியும் திரைப்படங்களில் தன் முகத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் வடிவேலு உடன் இணைந்து நடித்ததோடு நின்று விடாமல் டார்ச் லைட் என்ற விவகாரமான படத்தில் விலை மாதுவாக நடித்தார். இந்த படத்தில் நடித்ததை அடுத்து அவரது முழு பெயரும் மோசமாக உச்சரிக்கப்பட்டது.

இதனை அடுத்து தனது மொத்த லைப்பையும் டேமேஜ் செய்து விட பட வாய்ப்பு கிடைக்காமல் போக மும்பையில் எர்த் லிங்ஸ் கஃபே நடத்தி வருகிறார். ஜோராக சென்று கொண்டிருந்த எந்த பிசினஸ் தற்போது மூடிவிட இருப்பதால் லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.

மார்க்கெட் இழந்த சீக்ரெட்..

அது மட்டுமல்லாமல் பயில்வான் ரங்கநாதன் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை சதாவின் மார்க்கெட் காலியான ரகசியத்தை பலரும் அறிந்து கொள்ள சொல்லிவிட்டார்.

அந்த பேச்சில் நடிகை சதாவின் கெட்ட பழக்கம் தான் அவரது வாழ்க்கையை பாதித்திருப்பதாகவும், எப்போதும் நடிகை சதா புகை பிடித்துக் கொண்டே இருப்பார். ஷூட்டிங் சமயத்தில் கூட புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர். இதைத் தான் நேரில் பார்த்ததாக கூறி அதிர்ச்சியை கிளப்பிவிட்டார்.

புகை பிடிக்கும் பழக்கத்தால் இவரது மார்க்கெட் காலியானது என்ற விஷயத்தை பயில்வான் ரங்கநாதர் சொன்னதை அடுத்து இந்த விஷயமானது வைரலாக இணையங்களில் பரவி வருவதோடு நடிகை சதாவுக்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கா? என்று ரசிகர்களை கேள்வி கேட்க வைத்துவிட்டது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version