எங்களுக்கு சண்டை வந்தா.. ரெண்டு பேரும் சேர்ந்து இதை பண்ணுவோம்.. பச்சையாக கூறிய சினேகா..!

புன்னகை அரசி என்று ரசிகர்களால் விரும்பி அழைக்கப்படும் நடிகை சினேகா தமிழ் திரை உலகில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் பல ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து அண்மை பேட்டியில் பேசிய நடிகை சினேகா திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பல குழப்பம் குறித்தும் சண்டைகள் குறித்தும் பல்வேறு விதமான விஷயங்களை வெளிப்படையாக கூறி அதிர்ச்சியை தந்தார்.

நடிகை சினேகா..

பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் வரிகளில் தனது அழகான பல்வரிசையை காட்டி புன்னகை அரசியாக தமிழக இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை சினேகா திருமணமான புதிதில் பிரிந்து வாழ்ந்ததாக சொன்ன விஷயம் தற்போது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

திரை உலகில் அதிக அளவு மார்டன் உடையை விட புடவை, தாவணியாய் வந்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த நடிகை சினேகா தமிழ் திரைப்படங்களான வசீகரா, ஆட்டோகிராப், புதுப்பேட்டை, நான் அவன் இல்லை, பள்ளிக்கூடம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்றவற்றில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்தவர். சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.

எங்களுக்கு சண்டை வந்தா இத பண்ணுவோம்..

மேலும் நடிகை சினேகா 2012-ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஆஸ்திக்கு ஒரு மகன் ஆசைக்கு ஒரு மகள் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் அவ்வப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

இதனை அடுத்து தற்போது தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் திருமண வாழ்க்கை குறித்து அளித்த பேட்டி இணையத்தில் வைரலான நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதர் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

பச்சையாய் பேசிய சினேகா..

இந்த வீடியோவில் சினேகா மற்றும் பிரசன்னா காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அண்மையில் சினேகா அளித்த பேட்டி ஒன்றின் மூலம் குடும்பத்தில் விரிசல் வந்துள்ளது உண்மைதான் என்று கூறி இருப்பது பற்றி பேசி இருக்கிறார்.

மேலும் நானும் பிரசன்னாவும் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் காதலித்துக் கொண்டிருந்த போது தனித் தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

திருமணத்திற்கு பிறகு வாடகைக்கு வீடு தேடினோம் பல வீடுகளை பார்த்தோம். நடிகர் என்பதால் பலரும் வீடு தர தயங்கினார்கள். இதனால் ஒரு சில நாட்கள் நாங்கள் தனித் தனியாக வாழ்ந்து வந்தோம். அதன் பிறகு தான் ஒரே வீட்டில் குடியேறினோம் எனக் கூறியிருக்கிறார்.

மேலும் கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டால் டேட்டிங் செல்லுங்கள் அல்லது பெட்ரூமுக்குள் செல்லுங்கள். இது பல பிரச்சனைகளை தீர்க்கும் என்று சினேகா சொன்ன விஷயத்தை பாராட்டியாக வேண்டும் என பயில்வான் ரங்கநாதன் கூறிய விஷயம் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் பலரும் சினேகா சொன்னதில் உண்மை உள்ளதாக கூறி அந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version