போதையில் நடிகை ஜோதிகா..? கேள்வி எழுப்பி விளாசும் பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஆக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஜோதிகா மும்பை பூர்வீகமாகக் கொண்டவர் .

ஜோதிகாவின் திரைப்படங்கள்:

முதன் முதலில் வாலி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, முகவரி ,உயிரிலே கலந்து , குஷி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க, தூள், பிரியமான தோழி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பிடித்து விட்டார்.

இவர் நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்த போதே நட்பாக பழகி பின்னர் அது காதலாக மாற காக்க காக்க திரைப்படத்தில் நடித்த போது இருவரும் காதலித்து வந்தார்கள் .

அதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு தேவ், தியா என இரண்டு குழந்தைகள் பிறந்ததை அடுத்து ஜோதிகா சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்தார் .

ஜோதிராவின் ரீ என்ட்ரி:

இதை அடுத்து பல வருடங்கள் கழித்து மீண்டும் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து காற்றின் மொழி, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே ஹிந்தி திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்த அவர் அங்கு மும்பைக்கு சென்று குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார்.

இது தமிழ் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தற்போது அடுத்தடுத்து இந்தி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் ஜோதிகா சமீபத்தில் சைத்தான் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றிருந்தது.

இந்த நிலையில் தற்போது ஜோதிகா குறித்து பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசியிருப்பது வைரல் ஆகி வருகிறது.

போதையில் உளறிய ஜோதிகா:

ஜோதிகா போதையில் உளறியதாக பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

சென்னையில் ஒரு படத்தின் ப்ரோமோஷன்காக மும்பையில் இருந்து கிளம்பி வந்த அவர் விமானத்தில் பறந்து வந்தார்.

விமானத்தில் வந்த அவர் இங்கு வந்து இறங்கியதும் விமான நிலையத்தில் தங்கி விட்டு படத்தின் ப்ரமோஷன் கொடுத்து விட்டு மீண்டும் மும்பைக்கு சென்று விட்டார்.

அப்போது பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் அளித்த ஜோதிகா போதையில் உளறியதாக செய்திகள் கூறுகிறது.

மேலும், சென்னைக்கு வந்த அவர் தன்னுடைய மாமனார் வீட்டிற்கு கூட போகவில்லை. ஏற்கனவே நடிகை ஜோதிகாவுக்கு சென்னை என்றாலே வேப்பங்காயாய் கசக்கிறது.

மாமனார் மற்றும் மாமியாருடன் குடும்பம் நடத்துவதற்கு ஜோதிகாவுக்கு சுத்தமாக விருப்பமே இல்லை என பல பேச்சுக்கள் ஏற்கனவே எழுந்த நிலையில் தற்போது மீண்டும் அதை ஜோதிகா உறுதிப்படுத்திவிட்டார் என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version