இதுக்காக தான் பேசுறீங்க.. அப்படினா உங்க கடைசி மகள்.. பயில்வானை மடக்கிய நடிகை…!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிகழ்ச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை.

இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்தார். அதே நிகழ்ச்சியை போன்றே பல தொலைக்காட்சி சேனல்கள் பல்வேறு பெயர்களை வைத்து தொடர்ந்து விவாத நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.

” வாழ்ந்து காட்டுவோம் ” நிகழ்ச்சி:

அந்த வகையில் தற்போது கலைஞர் டிவியில் “வாழ்ந்து காட்டுவோம்” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை. நடிகை குயிலி தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பல்வேறு விவாதம், குடும்ப பிரச்சினைகளையும் சந்தித்து தீர்வு கண்டு வருகிறார்.

இந்நிலையில் நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத விதத்தில் அந்த நிகழ்ச்சியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது , பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் மற்றும் கவர்ச்சி நடிகை ஷகிலா இருவரும் நேருக்கு நேர் கலந்து கொண்டு செய்த நேர்காணல் காரசாரமாக மாறியுள்ளது.

திரைப்பட நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அவர்களின் அந்தரங்க விஷயங்களை பற்றியும் பயில்வான் ரங்கநாதன் பொதுவெளியில் போட்டு உடைத்து பலரின் முகம் சுளிக்க வைத்து வருகிறார்.

ஷகீலா Vs பயில்வான் ரங்கநாதன்:

இதனால் அவர் பெரும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சகிலாவிடம் பல வருஷமாக நீங்கள் லிவிங் லைஃப் வாழ்க்கையை வாழ்ந்துட்டு வறீங்களே எப்போ திருமணம் செஞ்சுக்க போறீங்க என கேள்வி கேட்டார்.

அதற்கு ஷகீலா “வாட்ஸ் யுவர் பிராப்ளம்”? என கடும் கோபத்தோடு கேட்கிறார்.அதை தொடர்ந்து பேசிய பயில்வான் ஷகிலா இதுக்கு முன்னாடி என்ன மாதிரியான படத்துல எல்லாம் நடிச்சாங்க என்ன மாதிரியான காட்சிகளில் அவங்க வந்து போவாங்க? ஆனால் , இப்போ என்ன பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்காங்க என கேட்கிறார்.

உடனே அதற்கு சகிலா என் வயித்து பிழைப்புக்காக நான் எதையோ காட்டி நடிக்கிறேன் அதில் உனக்கு என்ன பிரச்சனை என பதில் அளித்தார்.

அதற்கு உடனே பயில்வான் ரங்கநாதன், நானும் வயிற்று பிழைப்புக்காக பேசுகிறேன் என கூறுகிறார் வயிற்றுப் பிழைப்புக்காக என்ன வேணாலும் பேசலாமா என அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வரும் நடிகை குயில் கேட்டார்.

வயிற்றுப் பிழைப்புக்காக அப்போ எதை வேணாலும் காட்டலாமா என பயில்வான் ரங்கநாதன் பதில் கேள்வி கேட்கிறார். இதனால் அந்த அரங்கமே திக்கு முக்காடி பதில் சொல்ல முடியாமல் ஷகீலா திணறுகிறார்.

வயிற்று பிழைப்புக்கு காட்டுறேன்:

உடனே ஷகிலா பயில்வான் ரங்கநாதனை மிகவும் எமோஷனலாக அட்டாக் செய்கிறார். அதாவது, இரு ஒரு நல்ல அப்பாவாக கூட இருக்க மாட்டேங்கிறாரு… உங்களோட கடைசி மகள் யாரை காதலிக்கிறார்? என கேட்க கடுப்பான பயில்வான் ரங்கநாதன் “உரிமைக்கு ஒரு எல்லை தான் உண்டு” என்று கடும் கோபத்தோடு பதிலளிக்க ஷகிலா உடனே என்ன பயமா? என கேட்கிறார்.

அதைத் தொடர்ந்து பதிலளித்த பயில்வான்… நாக்கு அழிகிடும் என கை நீட்டி எச்சரிக்கிறார். இந்த காரசாரமான நேர்காணலின் ப்ரோமோ வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ:

திரைப்படங்களில் கவர்ச்சியான நடிகையாகவும் ஐட்டம் நடிகையாகவும் நடித்து முகம் சுளிக்க வைத்தவர் தான் நடிகை ஷகீலா.

இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் ஆபாச படங்கள் நடித்து முகம் சுளிக்க வைத்து வந்தார்.

அங்குள்ள ரசிகர்களை தன்னுடைய கட்டுப்பாட்டிலே வைத்திருந்தார் என்று சொல்லலாம். கிட்டதட்ட தனது 15 வயதிலேயே இது போன்ற படங்களில் நடித்து வந்த ஷகீலா பிளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமானார்.

குறிப்பாக இவர் நடிக்கும் மொத்த தேவைப்படும் பாலுணர்வு கிளர்ச்சியில் தான் எடுக்கப்படும்.

இதனால் மலையாள சினிமாவில் ரசிகர்கள் சகிலாவின் படத்திற்கு ஓடோடி வந்து பார்த்ததால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட படங்களே ஷகீலாவின் படங்களுக்கு முன்னால் திக்குமுக்காடி போய் நிற்கும்.
கவர்ச்சி நடிகை ஷகீலா:

இதனால் சகிலாவுக்கு ரெட் கார்டு கொடுத்து அவரை திரைப்படங்களில் நடிக்க விடாமல் தடுத்து மலையாள சினிமாவை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள்.

அதன் பின்னர் சகிலா சென்னையில் வந்து தஞ்சம் அடைந்தார். பின்னர் தமிழில் கிடைத்த ஒரு சில பட வாய்ப்புகளில் நடித்து வந்தார்.

இதனிடையே அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் வேறொரு ரூபத்தில் மக்களை கவர்ந்தார்.

அதில் மிகவும் டீசன்டாக பார்க்கப்பட்டார். அந்த நிகழ்ச்சி அதை தொடர்ந்து தற்போது பிரபலங்களை வைத்து நேர்காணல் நடத்தி வருகிறார்.

இப்படி ஆன நேரத்தில் தான் பயில்வான் ரங்கநாதன் உடன் இப்படி ஒரு காரசாரமான பேட்டி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version