ஷாப்பிங் மாலில் கோடாரி.. திரும்ப திரும்ப ஒற்றைக்கண்.. – வெளியானது பீஸ்ட் ட்ரெய்லர்..!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் ( Beast ) படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் இருப்பதாக ட்ரெய்லரை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் திரையரங்கு ஒப்பந்த வர்த்தகம் தற்போது சூடுபிடித்துள்ளது.

இதற்கிடையில் பீஸ்ட் திரைப்படம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் படத்தின் இயக்குனர் நெல்சன் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருந்தது.

வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் இந்திய உளவுத்துறை ஏஜென்ட் கதாபாத்திரத்தில் முதல்முறை விஜய் நடித்துள்ளதாகவும் நெல்சன் கூறிய தகவல்களால், படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இது ஒரு புறம் இருக்க, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானலே, கூடவே இலுமிநாட்டி கதைகளும் வெளியாவது வழக்கம். அவற்றை தொடர்ச்சியாக நாம் பார்த்து வருகிறோம்.

ஒற்றைக்கண்..

அப்படி இலுமிநாட்டி கதைகள் சொல்லும் நபர்கள் அடிக்கடி கூறுவது, ஒற்றைக்கண் சிம்பாலிசமும், கோடரி சிம்பாலிசமும் தான். அவை இந்த பீஸ்ட் ட்ரெய்லரில் நிரம்பி கிடக்கின்றன. அட ஒற்றைக்கண் காட்டுறது எல்லாம் ஒரு விஷயமா.. அப்புறம் எப்படி ஷாட் வைப்பது துப்பாக்கி சுடும் போதும்.. கதவின் ஓட்டை வழியாக எதிராளியின் நடவடிக்கையை கண்காணிக்கும் போதும் ரெண்டு கண்ணையுமா காட்ட முடியும் என கேட்கலாம்.

ஷாப்பிங் மாலில் கோடரியா..?

பொதுவாக, ஷாப்பிங் மால் என்றால் தீயை அணைக்கும் உபகரணங்கள் இருக்கும். சில இடங்களில் கண்ணாடியை உடைக்க சுத்தியல் கூட இருக்கும். ஆனால், எந்த ஊரு ஷாப்பிங் மாலில் கோடாரியை அவசர கால ஆயுதமாக மாட்டி வைத்துள்ளார்கள் என்று இயக்குனர் தான் விளக்க வேண்டும். இன்னும் ட்ரெய்லர் உள்ளே என்னென்ன சமாச்சாரங்கள் இருக்கிறது என இந்த இலுமிநாட்டி பேச்சாளர்கள் பேசி பயமுறுத்த போகிறார்களோ..? என்று நினைத்தாலே பகீர் என உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …