“அட்ரா சக்கை அப்படி போடு ஆண்களுக்கா..!” – இத்தனை அழகு குறிப்புகள்..!

பெண்கள் எப்படி அழகை விரும்புகிறார்களோ அதுபோலவே ஆண்களும் இன்று முக அழகை பாதுகாப்பதில் பெரும் பணத்தை செலவு செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆண்களுக்கு  உரிய மிக எளிய அழகு டிப்ஸை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆண்களுக்கு உரிய அழகியல் குறிப்புகள்

டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் அதிகளவு ஆண்களுக்கு சுரப்பதன் காரணமாக முகத்தில் எண்ணெய் வடிதல் பருக்கள் போன்றவை பெண்களை விட அதிக அளவு ஏற்பட காரணமாக உள்ளது.

எனவே இவர்கள் தினமும் மூன்று முதல் நான்கு முறை முகத்தை சோப்பு அல்லாமல் வேறு ஏதேனும் இயற்கையான முறையில் இருக்கும் ஃபேஸ்வாஸைக் கொண்டு முகத்தை கழுவுவது அவசியம் ஆகும்.

வாரத்திற்கு ஒருமுறை தக்காளியை கொண்டோ வெள்ளரிக்காயை கொண்டோ நீங்கள் பேசியல் செய்து வரும்போது இது போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்காமல் முகம் எண்ணெய் பசை இல்லாமல் மாறும்.

மேலும் கடலை மாவுடன் சில துளி ரோஸ் வாட்டரை கலந்து உங்கள் முகத்தில் தேய்த்து விட்டு கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதின் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் கருப்பு நிறம் மாறி நிறம் கூடுதல் அழகை கொடுக்கும்.

ஆண்களின் தலைமுடிக்கு வலிமை சேர்க்கக்கூடிய வைட்டமின் ஈ உள்ள ஷாம்பூவை நீங்கள் பயன்படுத்துவது மிகவும் நல்லது. உங்களுடைய முடியின் வேர்கால்களுக்கு வலு சேர்க்கும்.

அதுமட்டுமில்லாமல் உங்கள் தலைமுடியில் இருக்கும் பொடுகை நீக்குவதோடு மட்டுமல்லாமல் இளநரை ஏற்படாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த வைட்டமின் ஈ கலந்த ஷாம்புக்கு உள்ளது.

புகைப்பிடிப்பதினால் உங்கள் உதடுகள் கருமையாக இருந்தால் அதனை மாற்றுவதற்கு பீட்ரூட் ஒன்றை எடுத்து நறுக்கி அதில் சிறிதளவு சர்க்கரையை தேய்த்து உங்களது உதடுகளில் மசாஜ் செய்து விடுங்கள் தொடர்ந்து இதனை செய்வதின் மூலம் உங்கள் உதடுகளில் இருக்கும் வெடிப்பு மற்றும் கருப்பு தன்மை நீங்கிவிடும்.

உங்கள் சருமத்தை பராமரிக்க நீங்களும் சன் ஸ்கிரீன் லோசனை பயன்படுத்தலாம். அதில் ஆண்களுக்கு உரிய சன் ஸ்கிரீன் லோசனை வாங்கி நீங்கள் பயன்படுத்தும் போது வெயிலால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து உங்கள் சருமத்தை நீங்கள் பாதுகாக்க முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …