பெண்களுக்கு மட்டும் தான் அழகு குறிப்பா..? – இதோ ஆண்களுக்கான அசத்தல் டிப்ஸ்..!

அத்திப்பழம் அழகா என் அத்தை பெண் அழகா என்று கேட்கக் கூடிய அளவுக்கு அழகில் ஜொலிக்க வேண்டும் என்ற மனநிலையில் திகழும் பெண்களுக்கு இணையாக ஆண்களும் இன்று அழகு நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இவர்களும் வீட்டிலேயே இருந்து இயற்கையான ஆண்களுக்கு அழகு குறிப்புகள் மூலம் மேலும் தங்களை அழகாக்கி கொள்ளக்கூடிய சில அழகு குறிப்புகளை  எந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

அதிகாலையில் நீங்கள் எப்போதும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உங்கள் அழகு ஜொலிக்கும். மேலும் ஒரு டம்ளர் பாலில் குறைந்த அளவு தேனினை கலந்து உண்டு வர உங்கள் சரும நோய்கள் நீங்கி சருமம் பளபளப்பாகும்.

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள் தேய்த்து குழைத்து உடல் முழுவதும் தேய்த்து விட்டு பின் பயத்த மாவு கொண்டு தேய்த்துக் கொடுத்தால் உங்கள் தோல் கடினத்தன்மையில்லாமல் மிருதுவாகவும் பல பளப்பாக மாறும்.

இது மட்டுமல்லாமல் தோள்களில் சுருக்கங்கள் இருந்தால் அவை மறையும் ஆண்கள் ஆப்பிள் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் கண்களில் அழகு மிளிரும். இரவு தூங்குவதற்கு முன்பு ஆண்கள் சருமத்தில் ஆலிவ் ஆயில் தடவி உறங்கிய பின் அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து வர சரும ஆரோக்கியம் மேம்படும்.

வெயிலில் அதிக நேரம் நீங்கள் சென்று உழைப்பதால் உங்கள் மேனி சற்று கருத்திருக்கும். இந்த கருப்பு நீங்க நீங்கள் கற்றாழை ஜெல் மற்றும் குப்பைமேனி சாறு இவற்றை கலந்து தேய்த்து விட்டு அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சரும கருமை நீங்கும்.

இந்த குறிப்புகளை ஆண்கள் அனைவரும் பயன்படுத்துவதன் மூலம் பெண்களை விட அழகாக நீங்கள் மாறலாம். மேலும் இதனை வாரத்தில் ஒருமுறையாவது நீங்கள் கடைப்பிடிப்பது அவசியமாகும் அவ்வாறு கடைபிடிப்பதின் மூலம் தான் உங்கள் அழகு கூடும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version