” வேர்க்கடலையில் ஒளிந்திருக்கும் சரும ரகசியங்கள்..! ” – அடடா.. இத்தனை நாள் தெரியாமல் போச்சே..!!

ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படக்கூடிய வேர்கடலையை உண்பதின் மூலம் நமது சருமங்களுக்கு இவ்வளவு ஆரோக்கியம் கிடைக்குமா? என்பதை நினைத்துப் பார்க்கும்போது வியப்பில் நம்மை அது தள்ளிவிட்டது.

இந்த வேர்க்கடலையில் தருமத்தி பராமரிக்கக் கூடிய கொழுப்புகள், நார் சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவு உள்ளது. இந்த வேர்க்கடலையில் ஆன்டி-ஆக்சைடுகள் இருப்பதால் இது பிரீ ராடிகளால் ஏற்படக்கூடிய சரும பாதிப்பை தடுக்க உதவி செய்கிறது.

 மேலும் வேர்க்கடலையில் உள்ள ஆக்சனை ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள், வயதான புள்ளிகள், வயதாக கூடிய அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவி செய்கிறது.

மேலும் இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஈ வயதான தோற்றத்தை தள்ளி போட உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இது புற ஊதா கதிர்வீச்சுகளால் நிகழக்கூடிய தீமையை சருமங்களுக்கு ஏற்படுத்த விடாமல் பாதுகாக்கிறது.

 வேர்க்கடலை சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும், பொலிவையும் தருகிறது. இதன் மூலம் சருமத்தில் இருக்கக்கூடிய ஈரப்பதம் தக்க வைத்துக்கொள்ள இந்த வேர்க்கடலை உதவி செய்கிறது.

 பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கு முகத்தில் ஏற்படக்கூடிய முகப்பருவை எதிர்த்து போராட உதவுகிறது.  இதில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முகப்பருவை உண்டு பண்ணும் பாக்டீரியாக்களை தடுக்கிறது.

 வேர்க்கடலையில் உள்ள துத்தநாகம், கொலஜன் உற்பத்தியை தூண்டி விடுவதால் சருமம் எப்போதும் இளமையான தோற்றத்தை நமக்கு தருகிறது.

மேலும் கண்களின் கீழே ஏற்படக்கூடிய கரு வளையங்களை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் வைட்டமின் கே மற்றும் கொழுப்பு அமிலங்களுக்கு இருப்பதால் கண்களுக்கு கீழ் ஏற்படுகின்ற கருவளையத்தை குறைக்கக்கூடிய ஆற்றல்  வேர்க்கடலைக்கு என்னும் உண்டு.

 சரும மேனியை மென்மையாக வைத்துக் கொள்ள வேர்கடலையின் எண்ணெய் ஒரு மிகச்சிறந்த மாய்ஸ்ரைசராக பயன்படுகிறது. எனவே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வேர்கடலையை உண்பதற்கு மறுக்காதீர்கள்.

நீங்கள் கட்டாயம் உங்கள் உணவில் வேர்க்கடலையை உண்ணும் போது என்றும் இளமையான தோற்றத்தை பெறுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam