” அழக மாத்த தக்காளி ஒன்று போதும்…! உங்களை அசர வைக்கும் அழகியா மாத்த அழகு குறிப்பு..!

அட தக்காளியா இவ்வளவு சத்துக்களோடு உடலுக்குத் தேவையான ஜொலி ஜொலிப்பியும் கொடுப்பது என்பதை நினைத்தால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும் பெரும்பாலான பெண்களின் அழகுக்கு மேலும் அழகை சேர்க்க இந்த தக்காளி பழம் ஒன்று இருந்தாலே போதும் என்று சொல்லக்கூடிய அளவு உடல் அழகை பராமரிக்க இந்த தக்காளி பெருமளவு உதவி செய்கிறது.

 எனவே பெண்கள் அனைவரும் எளிதாக கிடைக்கும் இந்த தக்காளியை பயன்படுத்தி நீங்களும் உலக அழகி ரேஞ்சில் உங்கள் உடலை பராமரித்து பளபள என ஜொலிக்க முடியும்.

 வீட்டில் இருக்கும் பழுத்த தக்காளியை எடுத்து நன்கு பசை போல மைய அரைத்து அதை உங்கள் முகத்தில் தேய்த்து விட்டு 20 முதல் 30 நிமிடங்கள்  இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு செய்வதின் மூலம் உங்கள் சருமத்தில் குறிப்பாக முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை கருமை நிறம் மறையும்.

 முகப்பரு அதிகம் இருக்கக்கூடிய பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே தக்காளி சாறினை சம அளவு வெள்ளரிச்சாரோடு கலந்து பஞ்சில் முக்கி முகப்பரு இருக்கும் இடங்களில் தேய்த்து வரும் இதன் மூலம் முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகள் மறைவதோடு மீண்டும் முகப்பரு வருவது குறையும்.

மேலும் இது முகத்துக்கு தேவையான குளிர்ச்சியை உங்களுக்கு கொடுக்கும். உங்கள் கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தால் இனி கவலைப்பட வேண்டாம்.

 தக்காளி சாறு அரை டேபிள்ஸ்பூன் தேன் கால் டீஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து விட்டு இருக்கும் கண்ணின் கீழ் அப்படியே பூசி விடுங்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் இதை கழுவி விடவும் இப்படி திரும்பத் திரும்ப மாதம் தோறும் நான்கு முதல் ஐந்து முறை செய்வதின் மூலம் உங்கள் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

முகத்தை சரிவர பராமரிக்க நேரமில்லாதவர்களின் முகத்தில் இறந்த செல்கள் அதிகரித்து முகப்பொலிவை இழந்து இருப்பார்கள். இவர்கள் தக்காளி சாறுடன் சிறிதளவு ரவையை சேர்த்து முகத்தில் தேய்த்து கழுவுவதன் மூலம் பளபளப்பாக மாறும்.

இது போலவே தக்காளி சாறுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு துளசி சாறு ஆகியவற்றை கலந்து நன்கு தேய்த்து விடுவதின் மூலம் இறந்த செல்கள் அலைவதோடு முகப்பருக்கள் ஏற்படாமல் முகம் தகதகவென மின்னும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version