“பீட்ரூட் கீரை பொறியல்..!” – இப்படி செய்து சாப்பிடுங்க.!!

பீட்ரூட்டின் பயன்பாடு தெரிந்த நமக்கு பீட்ரூட்டின் மேல் வளரும் இலைகளை தான் பீட்ரூட் கீரை என்று கூறுகிறோம். இந்த கீரையின் பயன்பாடு பற்றி தெரியுமா? என்று கேட்டால் அதற்கான பதில் கிடைப்பது சற்று சிரமம் தான். எனினும் இந்த பீட்ரூட் கீரையில் சிலிர்க்க வைக்கக்கூடிய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும்.

அப்படிப்பட்ட பீட்ரூட் கீரையைக் கொண்டு பீட்ரூட் கீரை பொரியலை செய்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள நீங்கள் இனி உங்கள் வீட்டிலும் பீட்ரூட் கீரை பொறியல் செய்து அசத்துங்கள்.

பீட்ரூட் கீரை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்

1.பீட்ரூட்டின் மேல் இருக்கும் இலைகள் இரண்டு கைப்பிடி அளவு

2.சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒரு கப்

3.பச்சை மிளகாய் இரண்டு

4.காய்ந்த மிளகாய் ஒன்று

5.தேவையான அளவு உப்பு

6.தேங்காய் துருவல் அரை கப்

தாளிக்க

7.கடுகு

8.உளுத்தம் பருப்பு

9.தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் பீட்ரூட் கீரையை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயத்தின் தோல்களை நறுக்கி அதை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பச்சை மிளகாய் இரண்டை  நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை அடுத்து ஒரு வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி அடுப்பில் அதை வைத்து எண்ணெய் சூடானதும், அதில் தாளிக்க தேவையான கடுகு, உளுத்தம் பருப்பை போட்டு நன்கு பொறிக்க விடவும்.

 இவை பொறிந்தவுடன் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும். இது வதங்கி வரும் வேளையில் தேவையான அளவு உப்பை சேர்த்து வரமிளகாயும் போட்டு அப்படியும், இப்படியுமாக திருப்பி விடுங்கள்.

பிறகு நறுக்கி வைத்திருக்கும் பீட்ரூட் கீரையை இதில் போட்டு லேசாக தண்ணீரை தெளித்து விட்டு நன்கு வதங்கும் வரை காத்திருக்கவும்.இது வதங்கிய பிறகு மீண்டும் லேசாக தண்ணீரை தெளித்து விட்டு ஒரு மூடியை போட்டு ஐந்து நிமிடங்கள் கீரை வேகம் வரை காத்திருக்கவும்.

இதனை அடுத்து கீரை வெந்த பிறகு அதனை நன்கு இறக்கிவிட்டு, துருவி வைத்திருக்கும் தேங்காய் துருவலை போட்டு நன்கு இழக்கி விடுங்கள். இப்போது ஆரோக்கியம் தரக்கூடிய பீட்ரூட் கீரை பொரியல் தயார்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரக்கூடிய லெஸ் கலோரி உணவான இதை உங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …