Site icon Tamizhakam

நடிகை சினேகாவின் முதல் கணவர் யார் தெரியுமா..? பலரும் அறியாத ரகசியம்…!

நடிகை சினேகா தமிழ் சினிமா நடிகைகளில் மிக முக்கியமானவர் ஆவார் 2000 ஆம் ஆண்டு தமிழில் வெளியான என்னவளே திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் சினேகா. சினேகாவிற்கு முதன்முதலாக மலையாள சினிமாவில்தான் நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.

கேரளா பக்கம் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு ஒரு பார்ட்டிக்கு அவர் சென்ற பொழுது அங்கே நடிகர்கள் எல்லாம் கலந்து கொண்டிருப்பதை பார்த்தார். அங்கு இருந்த ஒரு இயக்குனர் சினேகாவை பார்த்து நீங்கள் நடிகையாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதை அடுத்து மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் சினேகா.

தமிழில் வாய்ப்பு:

அதற்கு பிறகு தொடர்ந்து தமிழில் வரவேற்பை பெற துவங்கினார் என்னவளே திரைப்படத்திற்கு பிறகு தமிழில் சில காலங்கள் அவருக்கு வரவேற்பு வராமல் இருந்தது. பிறகு ஒரு வருடங்களுக்கு பிறகு அவர் புன்னகை தேசம் என்கிற திரைப்படத்தில் நடித்தார்.

புன்னகை தேசம் திரைப்படத்தை இயக்குனர் ஷாஜகான் இயக்கியிருந்தார் அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து சினேகாவிற்கு வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. சொல்ல போனால் தமிழ் சினிமாவில் சினேகாவிற்கு புன்னகை மன்னன் திரைப்படம் ஒரு டர்னிங் பாயிண்ட் என்று கூறலாம்.

அதே வருடம் அவர் நடிப்பில் வெளிவந்த உன்னை நினைத்து திரைப்படமும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார் சினேகா. சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த காலகட்டங்களில் பெரிதாக சர்ச்சைக்குள் சிக்காத சில நடிகைகளில் சினேகாவும் ஒருவர்.

தொழிலதிபருடன் காதல்:

அவரைப் பற்றி பெரிதாக கிசுகிசுக்கள் கூட இருந்தது கிடையாது. ஆனால் சினேகா ஒரு தொழிலதிபரை காதலித்தார் என்று மட்டும் இப்பொழுது வரை பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இவர்கள் இருவருக்கும் இந்த காதல் மிக நாட்களாக இருந்ததாகவும் அதனை தொடர்ந்து சினேகா அந்த நபரை திருமணம் செய்து கொள்ளவும் இருந்தார் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது ஆனால் அதற்குப் பிறகு இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது கருத்து வேறுபாட்டின் காரணமாக பிறகு சினேகா அவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று பிரிந்து விட்டார்.

அதற்கு பிறகு தாமதமாகதான் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகா. எனவே சினேகா பிரசன்னாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒரு தொழிலதிபரை காதலித்தார் என்பது மட்டும்தான் எப்போதும் சினேகா குறித்து இருந்து வரும் கிசுகிசுவாக இருந்து வருகிறது.

Exit mobile version