கிறுகிறுன்னு வருதே.. தனுஷின் போயஸ் கார்டன் வீடு இந்த பணத்தில் கட்டப்பட்டதா..? பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் பிரபலங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் ஒருவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். நடிகர் தனுஷ் சினிமாவில் வளர்ந்த பிறகு தொடர்ந்து அவரை குறித்து நிறைய சர்ச்சைகள் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில் அவர் போயஸ் கார்டனில் கட்டி இருக்கும் வீடு குறித்தும் நிறைய சர்ச்சைகள் இருந்து வருகின்றன. இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் தற்சமயம் பாலிவுட்  சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

தனுஷ் வளர்ச்சி:

நடிப்பது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள மற்ற துறைகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறார் தனுஷ். மேலும் இயக்குனராக ஏற்கனவே பா பாண்டி என்கிற வெற்றி படத்தை தனுஷ் கொடுத்திருக்கிறார். தற்சமயம் ராயன் என்கிற திரைப்படத்தையும் இவர் இயக்கியிருக்கிறார்.

இந்த திரைப்படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே அதிக வசூலை செய்து நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்து இருக்கிறது. தனுஷ் சினிமாவில் வளர துவங்கிய அதே காலகட்டத்தில்தான் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் லிங்கா யாத்ரா என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

14 வருட வாழ்க்கைக்கு பிறகு தற்சமயம் சில பிரச்சனைகள் காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்திருக்கிறார் தனுஷ். இந்த விவாகரத்து தொடர்பாகவே நிறைய சர்ச்சைகள் பேசி வரப்படுகின்றன. தனுஷ் தமிழ் சினிமாவில் இருந்த நிறைய நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தது தான் அவரது மனைவி அவரை விவாகரத்து செய்வதற்கான காரணம் என்று ஒரு பக்கம் பேசப்படுகிறது.

வீடு சர்ச்சை:

ஆனால் இப்போது வரை தனுஷோ அல்லது ஐஸ்வர்யாவோ அவர்களது விவாகரத்து குறித்த காரணத்தை குறித்து எதுவும் கூறவில்லை. விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா தொடர்ந்து திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் அதே சமயம் அவருக்கு போட்டியாக தனுஷும் ராயன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த நிலையில் தனுஷ் பல கோடிகளை வாரி இறைத்து போயஸ் கார்டனில் ஒரு பிரம்மாண்டமான  வீட்டை கட்டி இருக்கிறார். இது குறித்து அவர் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய போது கூட போயஸ் கார்டனில் வீடு கட்டுவது என்பது தன்னுடைய பல வருட கனவு என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து பல பத்திரிகையாளர்கள் கூறும் போது பல தயாரிப்பாளர்களிடமிருந்து பணத்தை பெற்றுதான் தனுஷ் இந்த வீடு கட்டியுள்ளதாகவும் அட்வான்ஸ் தொகையை வாங்கிய எந்த தயாரிப்பாளருக்கும் இன்னும் தனுஷ் படம் நடித்து கொடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

அதேபோல பத்திரிக்கையாளர் செய்யார் பாலு கூறும்போது அவருமே பல தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கி விட்டுதான் தனுஷ் அந்த வீட்டை காட்டியிருக்கிறார் என்று உறுதிப்படுத்தி உள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version