பயந்துப்போய்தான் அந்த முடிவெடுத்தார்.. பிள்ளைகள் இப்ப யார் கூட.. ஜெயம் ரவி விவாகரத்தில் ரகசியம்..!

ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் தற்சமயம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் விஷயமாக இருக்கிறது. தமிழ் திரையுலகில் அதிக பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி.

ஜெயம் திரைப்படம் முதலே அவருக்கான வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் அதிகமாகதான் இருந்து வருகிறது. இவர் ஆர்த்தி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு ஒரு சில நிகழ்ச்சிகளில் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி மக்கள் முன்பு தோன்றியிருக்கிறார் என்றாலும் கூட பெரிதாக இவர் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கிடையாது.

பயந்துப்போய்தான் அந்த முடிவெடுத்தார்

ஜெயம் ரவியும் ஆர்த்தியும் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களை வைத்துதான் இவர்கள் இருவரையும் மக்களால் அடையாளம் காண முடியும் என்கிற நிலை இருந்தது. இந்த நிலையில் சமீப காலமாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவருமே பிரியப் போகிறார்கள் என்கிற ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் அதற்கு அதிகாரப்பூர்வமான எந்த ஒரு தகவல்களும் வெளிவரவில்லை. இருந்தாலும் கூட ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் கருத்து வேறுபாடு இருப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி ஜெயம் ரவிக்கும் அவரது மாமியாருக்கும் இருக்கும் பிரச்சனை தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என்று ஒரு பேச்சு உண்டு.

பிள்ளைகள் இப்ப யார் கூட

அதாவது ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயக்குமார் பிரபலமான தயாரிப்பாளர் ஆவார். அவரது தயாரிப்பில் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த இறைவன், சைரன் மாதிரியான பல படங்கள் தோல்வியை கண்டன. அதனை தொடர்ந்து ஜெயம் ரவியின் சம்பளத்தை அவர் குறைத்தார் என்று கூறப்படுகிறது.

மேலும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருந்த படமும் அவரது மாமியாரால் கைநழுவி போனதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஜெயம் ரவி அவரது மாமியாருடன் சண்டையிட துவங்கினார் அது அவரது மனைவிக்கும் அவருக்குமான சண்டையாக இறுதியில் மாறியது என்ற ஒரு பக்கம் கூறப்படுகிறது.

விவாகரத்தில் ரகசியம்

மற்றொரு புறம் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் மிகவும் சொகுசான வாழ்க்கையை வாழப் பழகிக் கொண்டவர். இதனால் தொடர்ந்து அதிக செலவு செய்பவராக அவர் இருந்து வந்தார். மேலும் நிறைய இரவு நேர பார்ட்டிகளுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஆர்த்தி.

இதனால் அடிக்கடி அவர் அதிகமாக மது அருந்திவிட்டு வந்ததாக ஒரு பேச்சு உண்டு.  இந்த நிலையில் தற்சமயம் ஜெயம் ரவி தனக்கும் தனது மனைவிக்குமான விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது இது ஒரு கடுமையான முடிவு தான் என்றாலும் கூட சுற்றி உள்ளவர்களின் நன்மைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறி இருக்கிறார்.

இது குறித்து நெட்டிசன்கள் கூறும் பொழுது ஜெயம் ரவியின் மனைவி அதிகமாக மது அருந்திவிட்டு வருவது என்பது அவரது குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே இதனால் பயந்துப்போன ஜெயம் ரவி இதை கவனத்தில் கொண்டுதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் விவாகரத்துக்கு பிறகு குழந்தைகள் பெரும்பாலும் அம்மாவின் வசம் தான் அனுப்பப்படுவார்கள். அவர்கள் அம்மா மது போதைக்கு அடிமையானவர் என்பதை நிரூபித்தால் மட்டுமே தந்தையின் பாதுகாவலில் குழந்தைகள் வருவார்கள். எனவே தற்சமயம் ஜெயம் ரவியின் குழந்தைகள் யாரின் பாதுகாவலுக்கு கீழ் செல்வார்கள் என்பது ஒரு கேள்வியாக இருந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version