பாகுபலி திரைப்படம் மூலமாக அகில இந்திய அளவில் வரவேற்பு பெற்ற ஒரு நடிகராக மாறியவர்தான் நடிகர் பிரபாஸ். 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் என்கிற தெலுங்கு திரைப்படம் மூலமாக இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் தெலுங்கில் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தாலும் கூட இந்திய அளவில் அவருக்கு வரவேற்பை பெறும் திரைப்படமாக எதுவும் அமையவில்லை. இந்த நிலையில்தான் 2015 ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை பெற்று கொடுத்தது. மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபாஸிற்கு வரவேற்பையும் பெற்று கொடுத்தது.
பேன் இந்தியா ஸ்டார்:
அதனை தொடர்ந்து பிரபாஸ் நடித்த திரைப்படம் சாகோ. அதனைத் தொடர்ந்து ராதே ஷ்யாம், ஆதிப்புருஷ் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஆனால் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே பேன் இந்தியா திரைப்படங்களாக இருந்தாலும் கூட அவை பெரிதாக வெற்றி எதுவும் பெறவில்லை.
தொடர்ந்து இந்த மூன்று திரைப்படங்களுமே அவருக்கு தோல்வியை அளித்து வந்தன. அதனை தொடர்ந்து அவர் நடித்த சலார் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. தற்சமயம் அவர் நடித்து வரும் கல்கி 2898 ஏடி திரைப்படம் ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான ஒரு திரைப்படமாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
ராஜமௌலி டாக்:
இதற்கு நடுவே தெலுங்கு சினிமாவில் பிரபாஸ் திரைப்படங்கள் நடித்து வந்த சமயத்தில் அவருக்கும் நடிகை அனுஷ்காவிற்கும் இடையே காதல் இருந்ததாக பேச்சுக்கள் இருந்து வந்தன. ஆனால் குறுகிய காலங்களே இந்த காதல் நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு பிரபாஸும் நடிகை அனுஷ்காவும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் பாகுபலி திரைப்படத்தின் இயக்குனரான ராஜமௌலி இது குறித்து சுவாரசியமான சில விஷயங்களை தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த பேட்டியில் பிரபாஸ் ஏன் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று ராஜமௌலி பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது பிரபாஸ் அடிப்படையில் ஒரு முழு சோம்பேறி அவருக்கு திருமணத்தின் மீதெல்லாம் ஈடுபாடு கிடையாது. அதற்கு அவரது சோம்பேறித்தனம்தான் காரணம் அதனால்தான் இதுவரையிலும் பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார் என்று கூறியுள்ளார் ராஜமௌலி.
இதற்கு முன்பு வரை அனுஷ்காவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால்தான் பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பலரும் நினைத்து வந்த நிலையில் ராஜமௌலி இப்படி பேசி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.