“பல நோய்களைக் தீர்க்கும் அற்புத எண்ணெய்..!” – தேங்காய் எண்ணெய்..!!

பன்னெடுங்காலமாக நமது பயன்பாட்டில் இருந்த தேங்காய் எண்ணெயில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது என்று சிலர் கூறியதை அடுத்து அதன் பயன்பாட்டை அப்படியே மறந்துவிட்ட நாம் இன்று மூட்டு வலி, முழங்கால் வலி மற்றும் எண்ணற்ற வழிகளின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறோம். அதற்குக் காரணம் கொழுப்பு நீக்கப்பட்ட ரீஃபைன்ட் ஆயிலை நாம் பயன்படுத்துவது தான்.

இந்த உண்மையை தற்போது உணர்ந்து கொண்ட பலரும் நம் பாரம்பரிய செக்கு எண்ணெய்க்கு மாறி நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை தற்போது சமையலில் பயன்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் படிக்கலாம்.

தேங்காய் எண்ணெயால் கிடைக்கும் நன்மைகள்

தற்போது வெளிவந்திருக்கும் ஆய்வில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளின் அறிவு ஆற்றல் திறன் மேம்படுகிறது என்றும் அல்சைமர் என்ற நோய்க்கு இது சரியான மருந்தாக உள்ளது என்று நிரூபித்து உள்ளதோடு மட்டுமல்லாமல் தேங்காய் எண்ணெயை அந்த  நோய்க்கு மருந்தாக கொடுக்க பரிந்துரையும் செய்துள்ளார்கள்.

தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி வருவதால் நமது பல் ஆரோக்கியமானது மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தினமும் நீங்கள் ஆயுள் புல்லிங் என்று சொல்லக்கூடிய வாயில் எண்ணெயை ஊற்றி நன்கு கொப்பளிப்பதன் மூலம் ஈறுகளில் இருக்கக்கூடிய பிளேக் பாக்டீரியாக்கள் கொல்லப்படுவதோடு மட்டுமல்லாமல் வாய் துர்நாற்றத்தை சரி செய்ய பயன்படுகிறது.

உங்கள் குடலில் என்ன பிரச்சனைகள் இருந்தாலும், செரிமானத்தை சீர் செய்யக்கூடிய ஆற்றல் என்ன தேங்காய் எண்ணெய்க்கு உள்ளது. மேலும் குடலில் ஏற்படும் பல்வேறு வகையான பாக்டீரியா, பூஞ்சை ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் தேங்காய் எண்ணெய்க்கு உள்ளது.

மனநலத்தை அதிகரித்து மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய தன்மை தேங்காய் எண்ணெயை உள்ளதால் தினமும் தேங்காய் எண்ணெயை உங்கள் தலைக்கு மெதுவாக தேய்த்து மசாஜ் செய்வதின் மூலம் உங்களது மன அழுத்தம் மற்றும் சோர்வு நீங்கும்.

எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுப்புகளை உறிஞ்சி கொடுக்கக்கூடிய திறன் என்ற தேங்காய் எண்ணைக்கு உள்ளதால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தேங்காய் எண்ணெயை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்வதின் மூலம் ஆஸ்டியோ ஃபோரோசிஸ் என்ற நோயின் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இது உடலில் இருக்கும் ஹெச் டி எல் கொழுப்பின் அதிக அளவை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.மேலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேங்காய் எண்ணெயை தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும் விரைவில் உடல் எடை குறையும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …