“கோடையில் புத்துணர்ச்சியை கொடுக்கும்..!” – மாடர்ன் நுங்கு சர்பத்..!

கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய உன்னதமான பானங்கள் பல இருந்தாலும் நுங்குக்கு நிகராக எதையும் கூற முடியாது. இது இயற்கையாகவே உங்கள் உடலை குளிர்ச்சி ஆக்குவதோடு உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தருகிறது. அந்த வகையில் இந்த நுங்கில் இருந்து நுங்கு சர்பத் எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

நுங்கு சர்பத் செய்ய தேவையான பொருட்கள்

1.நுங்கு 5

2.நன்னாரி அல்லது சிரப் இரண்டு டீஸ்பூன்

3.எலுமிச்சை சாறு

4.புதினா இலை 4

5.ஐஸ் கட்டிகள்

6.தண்ணீர் 2 கப்

செய்முறை

முதலில் நுங்கின் மஞ்சள் நிற தோலை முழுவதுமாக எடுத்து விடுங்கள். இதனை அடுத்து இந்த வெள்ளை நிற நுங்கை மிக்ஸி ஜாரில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டுக் கொள்ளவும்.

இதனை அடுத்து உங்களிடம் இயற்கையான நன்னாரி வேர் இருந்தால் அதில் இரண்டு துண்டுகள் வெட்டி போடலாம். அப்படி இல்லை என்றால் நன்னாரி சிரப்பை இரண்டு டீஸ்பூன் அதில் ஊற்றி விடுங்கள். பிறகு இதனோடு அரை மூடி எலுமிச்சை சாறு கொட்டைகள் விழாதவாறு புளிந்து விடவும்.

பிறகு உங்களுக்கு குளிர்ச்சி எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு ஐஸ் கட்டிகளை போட்டுவிட்டு இரண்டு கப் அளவு நீரை சேர்த்து விடுங்கள்.

இப்போது இந்த மிக்ஸி ஜாரை மிக்ஸியில் பொருத்தி பல்ஸ் மோடில் நன்கு அரைத்து எடுக்கவும். இப்போது சுவையான நுங்கு சர்பத் தயார். இந்த நுங்கு சர்பத்தை ஒரு பாத்திரத்தில் அல்லது ஒரு டம்ளரில் விட்டுவிட்டு அதன் மேல் புதினா இலை இரண்டை போட்டு விடுங்கள்.

கோடைக்கு இதமளிக்கும் இந்த பானத்தை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். மேலும் நீங்கள் இந்த பானத்தோடு ஐஸ் சேர்க்காமல் தண்ணீரை விட்டு அடித்துக் குடிப்பது இன்னும் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

இந்த ஜூஸுக்கு  சர்க்கரையை நீங்கள் சேர்க்க வேண்டாம். சக்கரை இல்லாமல் பருகும் போது தான் சுவை கூடுதலாக இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …