.”அழகு கலையின் ராணி கற்றாழை..!” – எதுக்கெல்லாம் யூஸ் பண்ணலாம் தெரிஞ்சுக்கோங்க..!

கற்றாழை இல்லாமல் எந்த ஒரு அழகு சார்ந்த சாதனங்களும் இல்லை என்று கூறும் அளவிற்கு அழகுக் கலையில் ஒரு அளப்பரிய இடத்தை இந்த கற்றாழை பிடித்திருக்கிறது.

 பொதுவாக கற்றாழை ஆற்றங்கரை ஓரங்களிலும் தோட்டங்களிலும் அதிகமாக காணப்படக்கூடிய இதனை தற்போது தோட்டத்தில் பயிரிடவும் செய்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட இந்த கற்றாழையில் என்னென்ன சத்துக்கள் உள்ளது. இது எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கற்றாழையில் இருக்கும் சத்துக்கள்

கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம்,வைட்டமின் கே, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் அதிகளவு உள்ளது.

கற்றாழை ஜெல்லின் நன்மைகள்

💐உங்கள் உடம்பில் தீக்காயம் ஏற்பட்டிருந்தால் அந்த தீக்காயத்தை சரி செய்யக்கூடிய ஆற்றல் இந்த கற்றாழை ஜெல்லுக்கு உள்ளது. எனவே தீப்பற்ற இடத்தை நீங்கள் கற்றாழை ஜூலை கொண்டு தடவி விடுவதின் மூலம் விரைவில் உங்களது தீக்காயங்கள் ஆகும்.

💐உங்கள் கால்களில் அல்லது கைகளில் ஏற்படக்கூடிய சிறிய வெட்டு காயங்கள் சிராய்ப்புக்களால் வலி ஏற்படும் போது அந்த பகுதியில் கற்றாழை ஜெல்லை தடவி விட்டால் எரிச்சல் உணர்வு குறைந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

💐உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள எந்தவிதமான மாயச ரைசரும் தேவையில்லை. இந்த கற்றாழை ஜெல்லை கூழாக்கி நீங்கள் இதனை தடவி வந்தாலே போதும். உங்களது சருமத்தை இது ஈரப்பதமாக வைத்துக் கொள்ளும்.

💐ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சரும நோய்களுக்கு நிவாரணம் பெறக்கூடிய வகையில் இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்திக் கொள்ளலாம்.

💐உங்கள் முக அழகை பேணவும் முகத்தில் ஏற்படக்கூடிய மாசு மருக்களை நீக்கவும், கற்றாழை ஜெல்லை வாரத்துக்கு ஒரு முறை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் முகம் பளபளப்பு ஆகும்.

💐ஒரு சில பேருக்கு இந்த கற்றாழை ஜெல் ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே அவர்கள் முகத்திலோ, கையிலோ சிறிதளவு தேய்த்துப் பார்த்து எரிச்சல் ஏற்படாத நிலையில் இருந்த கற்றாலை ஜெல்லை நீங்கள் பயன்படுத்தலாம்.

💐உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தரும் எந்த கற்றாழை ஜெல்லை நீங்கள் ஜூஸாக கூட பருகலாம். இதன் மூலம் உங்கள் கோடை இந்த கோடையில் ஏற்படக்கூடிய சரும நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …