அட வேக வைத்த முட்டையில் இவ்வளவு சத்துக்களா? – அவசியம் சாப்பிடுங்க..!

முட்டை எவ்வளவு புரதச்சத்து மிகுந்து உள்ளது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். எனவே தான் முட்டையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள டாக்டர்கள் அனைவரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

 அதிலும் நாட்டு கோழி முட்டையில் அளப்பரிய ஆற்றல் இருப்பதோடு மிகச்சிறந்த சத்துக்கள் இருப்பதால் குழந்தைகள் முதல்  பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் அனைவருமே எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு பட்டியலில் முட்டைக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது.

அப்படிப்பட்ட முட்டையை வேக வைத்து உணவை சேர்த்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாமா.

வேக வைத்த முட்டையில் இருக்கும் சத்துக்கள்

அதிக சத்துக்களை கொண்டிருக்கும் எந்த முட்டையை நீங்கள் சமைத்து உண்ணும் முறையில் வைத்து அதில் இருக்கக்கூடிய சத்துக்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

எனினும் இதில் இருக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு தேவை.எனவே தினமும் இதனை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

👍பச்சையாக முட்டையை உண்பதை விட நீங்கள் வேகவைத்து உண்ணும் போது இதன் கலோரி குறைவாகவும் புரதம் அதிகமாகவும் உங்கள் உடம்புக்கு உடலுக்கு கிடைக்கும்.

👍வேக வைப்பது மூலம் இதன் புரதம் எளிதில் ஜீரணம் ஆகுவதால் உங்கள் உடல் இந்த புரதத்தை எளிதில் உறுஞ்சி விடும்.

👍 உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வேகவைத்த முட்டையை உட்கொள்வது நல்லது. முட்டையில் எண்ணற்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், நிறைவுறாத கொழுப்புகள் இருப்பதால் இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.

👍மேலும் நினைவாற்றலை அதிகப்படுத்த கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது. எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை தேவையான ஊட்டச்சத்துக்கள் முட்டையில் இருப்பதால் எலும்பை வலுவாக்கமும் தசைகளை உறுதியாகவும் நினைப்பவர்கள் முட்டையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

👍இதயம் மற்றும் ரத்த நாளங்களில் இவை மிகச் சிறப்பாக செயல்படுவது மூலம் இவற்றின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து கொழுப்பை கட்டுப்படுத்துவதில் வேகவைத்த முட்டை  நல்ல பலனை கொடுக்கும்.

👍வேக வைத்த முட்டையை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் இதில் உள்ள வேதிப்பொருட்களான லுடீன், ஜியாக்சாண்டின் செலினியம்  மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உங்கள் கண் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக உள்ளது.

👍மேலும் வேகவைத்த முட்டையில் இருக்கும் வைட்டமின் பி இரும்பு சத்து கோளின் ஆகியவை மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்வதோடு உடலுக்கு தேவையான வைட்டமின் டி யை கொடுத்து மனச்சோர்வை நீக்க உதவி செய்கிறது.

👍கருவுற்றிருக்கும் தாய்மார்கள் உணவில் தினமும் வேகவைத்த முட்டையை சாப்பிடுவதின் மூலம் கருவில் வளரும் குழந்தையின் மூளை ஆரோக்கியமாக இருப்பதோடு முதுகுத்தண்டு செல்களின் வளர்ச்சி மிக நேர்த்தியான முறையில் அமையும்.

 எனவே மேற்கூறிய முட்டையை நீங்கள் வேகவைத்து உண்பதின் மூலம் உங்கள் குடும்ப ஆரோக்கியத்தை மிகச் சிறப்பாக பராமரிக்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …