“மோரில் இருக்கும் மோர் எனர்ஜி..!’ – இந்த வெயிலுக்கு தினமும் குடிங்க..!!

அட நீர் மோரா என்று அசால்டாக கேட்பவர்களுக்கு இந்த மோரில் இருக்கும் நன்மைகள் தெரிந்தால் கட்டாயம் தினமும் மோரை குடிப்பீர்கள்.

கோடை வெயிலுக்கு உடலுக்கு இடமாக குளிர்ச்சியை தரக்கூடிய இந்த மோரில் இஞ்சி, கருவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் இவற்றை கலந்து குடிப்பதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

உடலுக்கு தேவையான குளிர்ச்சியை இயற்கையாக தரக்கூடிய தன்மை இந்த மோருக்கு உள்ளது. மேலும் இது உடலை புத்துணர்வோடு வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.

மோரில் 90% தண்ணீர் மற்றும் பொட்டாசியம் அதிகளவு இருப்பதால் எலக்ட்ரோடுகளை போல இது செயல்படுகிறது. இதனால் நீர் சத்தை சரியான அளவு உடலில் பராமரிக்க இது உறுதுணையாக உள்ளது.

மோர் குடிப்பதின் மூலம் செரிமான மண்டலத்திற்கு மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கிறது. குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்க உதவி செய்கிறது. மேலும் குடலில் ஏற்படக்கூடிய புற்றுநோயை தடுப்பதில் இந்த மோர் பெரும்பங்கு வகிக்கிறது.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுவதோடு தொற்று நோய்களின் தாக்குதல்களில் இருந்து உடலை பாதுகாக்க கூடிய சக்தி மோருக்கு உள்ளதால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் மோர் குடிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த மோரில் இருக்கும் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் உங்கள் உடல் எடை இளைப்புக்கு உறுதுணையாக இருக்கும். இதில் கொழுப்பு சத்து குறைவாக விரும்புவதால் எடையை குறைக்க விரும்புபவர்கள் அவர்களின் டயத்தில் மோரை சேர்த்துக்கொள்ளலாம்.

இது உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி கல்லீரலை சிறப்பாக பாதுகாக்க கூடிய தன்மை இந்த மோருக்கு உள்ளது. எனவே கோடையில் தவறாமல் நீங்கள் மோரினை உங்கள் உணவில் முக்கிய பொருளாக கேட்டுக் கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …