“நீச்சத்து மிகுந்த சுரைக்காய்…!” – கோடையில் சாப்பிடுவதால் எத்தனை நன்மைகளா?

 நீர் சத்து மிகுந்திருக்கும் சுரைக்காயில் வைட்டமின் பி வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவு உள்ளது. இந்த காயை பொருத்தவரை 96.07 சதவீதம் நீர் சத்தைக் கொண்டுள்ளது. மேலும் இதில் இரும்பு சத்தானது 3.2% உள்ளது.

மேலும் இது தாதுப்பு, பாஸ்பரஸ், புரதம், கார்போஹைட் போன்ற சத்துக்களை கொண்டிருக்கும் இந்த சுரைக்காயை வெயில் காலத்தில் நீங்கள் அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற மருத்துவ நன்மைகளை அடைவதோடு உங்கள் உடலில் நீர்ச்சத்தை குறையாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இது விலை மலிவான காய் என்பதால் யாரும் இதை அதிக அளவு விரும்புவதில்லை. எனினும் இதில் உள்ள ஊட்டச்சத்து நிறைந்த நன்மைகளை கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால் கட்டாயம் நீங்கள் உணவில் எந்த காயையும் சேர்த்துக் கொள்வீர்கள்.

சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

👍சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய் இந்த சுரைக்காய். நீரழிவு நோயாளிகள்  அதிக அளவு அவர்கள் உணவில் இதனை உட்கொள்வதில் மூலம் ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை கணிசமாக குறைக்க முடியும்.

👍இந்த சுரைக்காயை ஜூஸ் ஆக நீங்கள் குடித்து வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிறுநீர் கட்டி, நீர் எரிச்சல், நீர்க்கட்டி ஆகியவை குணமாவதோடு சிறுநீரகப் பிரச்சனைகளும் சரியாகும்.

👍சுரைக்காய் உடலில் இருக்கும் தேவையற்ற நீரை வெளியேற்ற உதவி செய்கிறது. இதன் மூலம் நீங்கள் இந்த சுரைக்காயின் ஜூசை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் உடலில் ஏற்பட்டிருக்கும் வீக்கம், பெருவயிறு, நீர் கட்டு போன்றவை நீங்கும். காமாலை நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக இந்த சுரைக்காய் சாறு பயன்படுகிறது.

👍 சுரைக்காயை அரைத்து பத்து போடுவதின் மூலம் தீராத தலைவலி நீங்கும். வெப்பத்தால் ஏற்படக்கூடிய நோய்களை தடுத்து செரிமானத்தை தூண்டி விடுகிறது.

👍 கை கால்களில் எரிச்சல் இருந்தால் சுரைக்காயின் சதைப்பகுதியை எடுத்து எரிச்சல் உள்ள பகுதியில் அப்படியே கட்டி விட்டால் எரிச்சல் குறைந்து குளிர்ச்சியாக மாறிவிடும்.

 மேற்கூறிய இத்தனை நன்மைகளும் கொண்ட சுரைக்காய் வாரத்தில் ஒருமுறையாவது கோடையில் நீங்கள் உங்கள் உணவோடு சேர்த்து இந்த பயன்களை பெறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …