“தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்..!” – குடிப்பதால் எத்தனை நன்மைகளா..!

பன்நெடும்  காலமாகவே நமது பயன்பாட்டில் தேங்காய் எண்ணெய்க்கு மிக முக்கிய இடம் உள்ளது. தேங்காய் எண்ணெயானது சமையல் மட்டுமல்லாமல் சரும பராமரிப்புக்கும் பெரும் உதவி செய்கிறது.

அப்படிப்பட்ட தேங்காய் எண்ணெயின் மூலம் நமக்கு எண்ணற்ற பயன்கள் கிடைக்கிறது என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எனினும் இந்த தேங்காய் எண்ணெயை நீங்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாமா?.

வெறும் வயிற்றில்  தேங்காய் எண்ணெயை குடிப்பதால் ஏற்படும் பயன்கள்

பொதுவாகவே இன்று இருக்கக்கூடிய தலைமுறையினர் காலை எழுந்ததும் காபி, டீ என்று ஏதேனும் ஒரு பானதத்தை குடிக்க கூடிய பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.

இப்படி சூடான பொருட்களை குடிப்பதை தவிர்த்து விட்டு நீங்கள் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் உங்களுக்கு என்னென்ன பயன் கிடைக்கும் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த சுத்தமான தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது  மேலும் இதை நீங்கள் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் போது பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது.

அப்படிப் பார்க்கையில் நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்பினால் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை குடிப்பதன் மூலம் உங்கள் உடல் எடை விரைவாக குறையும். அதற்கு காரணம் இந்த தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு மெதுவாக ஜீரணம் ஆகி உங்களை நீண்ட நேரத்திற்கு பசி இல்லாமல் வைத்திருக்கும்.

அதுமட்டுமல்லாமல் சர்க்கரையின் அளவை ரத்தத்தில் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கவும் இது உதவி செய்கிறது. எனவே நீங்கள் தேங்காய் எண்ணெயை குடிக்கும் பழக்கத்தை அதிகாலையில் அதுவும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் உங்கள் உடல் எடை கட்டாயம் குறையும்.

இளம் பெண்கள் அனைவரும் இன்று பி சி ஓ எஸ் என்ற  பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெயை குடிப்பதின் மூலம் இந்த நீர்க்கட்டி பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைய முடியும்.

 மேலும் இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனையை எதிர்கொள்ள கூடியவர்கள் இதனை குடிப்பதின் மூலம் உங்கள் வயிற்றில் கொழுப்பு படிகள் தடுக்கப்பட்டு இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனையை உங்களால் சமாளிக்க முடியும்.

மூல நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மலச்சிக்கல் இருந்து விடுதலை அளிக்கக்கூடிய சக்தி இந்த தேங்காய் எண்ணெய்க்கு உள்ளது. சுத்தமான தேங்காய் எண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வந்தீர்கள் என்றால் மூன்று முதல் நான்கு நாட்களில் மூல நோயின் வலியிலிருந்து உங்களுக்கு விலக்கு ஏற்படும். அது மட்டுமல்லாமல் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

தேங்காய் எண்ணெய்க்கு வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தக்கூடிய ஆற்றல் உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam