” என்னது கிளியோபாட்ரா இந்தப் பாலுல குளிச்சு தான் பேரழகி ஆனாங்களா..! – அதுவும் கழுதைப் பால் – லா?

உலகம் என்று தோன்றியதோ அன்று முதலே அழகு என்பது ஒவ்வொருவரும் விரும்பி வரும் ஒரு கலை என்று கூறலாம். தன்னை எப்போதும் அழகாக வெளிப்படுத்த அந்த காலத்து மனிதர்கள் முதல் எந்த காலத்து மனிதர்கள் வரை ஒரே மனநிலையை தான் பின்பற்றி வருகிறார்கள்.

 அந்த வகையில் அழகுக் கலையில் கழுதைப் பாலுக்கு என்று ஒரு தனி சரித்திரம் உள்ளது என்று கூறலாம். ஏனெனில் உலகில்  பேரழகியாக மதிக்கப்பட்ட கிளியோபாட்ரா சருமத்தை அழகுபடுத்திக் கொள்ள இந்த கழுதை பாலில் குளித்ததாக செய்திகள் உள்ளது.

 எகிப்து பேரழகியான இவரது மேனியின் அழகிற்கு ரகசியம் இதுதானா? என்று அறிந்து கொண்ட அனைவரும் இப்போது கழுதை பாலை பயன்படுத்த துவங்கி விட்டார்கள்.

கழுதை பாலில்  ஒழிந்திருக்கும் அழகின் ரகசியம்

1.சாதாரண பாலை விட இந்த கழுதை பாலில் நான்கு மடங்கு அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்களுக்கு ஊட்டச்சத்தை அள்ளித் தருகிறது.

2.எனவே தான் மருத்துவத் தந்தையான ஹிப்போக்ரடீஸ் காய்ச்சல் மற்றும் காயங்கள் போன்றவற்றுக்கு கழுதை பாலை பயன்படுத்த பரிந்துரை செய்திருக்கிறார்.

3.மேலும் கழுதை பாலில் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது உடலை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள உதவி செய்வதோடு வயதான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தக்கூடிய காரணிகளை வளர விடாது.

4.இது சருமத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களை சரி செய்து என்றும் இளமை ஊஞ்சலாடும்படி செய்கிறது. நுண்ணுயிரிகளை எதிர்க்கக் கூடிய சத்து எந்த பாலில் அதிகமாக இருப்பதால் தோலில் ஏற்படும் அலர்ஜி தோல் சிவத்தல் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

5.இதில் அதிகளவு ஆன்டிஆக்சைடுகளை கொண்டிருக்கக் கூடிய இந்த கழுதை பால் இயற்கை அமிர்தம் என்று நாம் கூறலாம். அந்த அளவுக்கு உடலுக்கு தேவையான அழகை ஏற்படுத்த உதவி செய்கிறது.

6.சரும ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களான இ, ஏ, பி ஒன், பிசி போன்றவை இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒமேகா மூன்று ஆறு போன்ற கொழுப்பு அமிலங்களையும் கொண்டுள்ளதால் சருமத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

எனவே கழுதைப் பாலை அடிக்கடி உங்கள் முகம் கை, கால்களில் தடவி வர உங்கள் மேனி மினு மினுப்பாகி பளபளக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …