“மசாலா பொருட்களின் மன்னன் சோம்பு..!” – நன்மைகள் என்ன பார்க்கலாமா?

இந்திய சமையல் அறையில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் சோம்பு பற்றி அதிகமாக பகிர வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவு இதன் பயன்பாடு இன்றும் உள்ளது என்றால் அதற்குக் காரணம் சோம்பு போட்ட உணவு எளிதில் ஜீரணம் ஆவதோடு அதன் மணம் உணவிற்கு கூடுதல் சுவை கொடுப்பது தான்.

எனவே நீங்கள் செய்யும் உணவை சுவை நிறைந்ததாக மாற்றக்கூடிய இந்த சோம்பு பற்றியும் அதனால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சோம்பு தரும் ஆரோக்கியம் நன்மைகள்

சோம்பு ஒரு மிகச்சிறந்த பாக்டீரியல் எதிர்ப்பு பண்பு கொண்டது. வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட சோம்பு பயன்படுகிறது. எனவே தான் பெரும்பாலான உணவகங்களில் உணவு உண்ட பிறகு சோம்பில் சிறிதளவு இனிப்பு கலந்த மிட்டாய் போல  தருகிறார்கள்.

ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கட்டாயம் சோம்பினை தினமும் சாப்பிடுவதின் மூலம் உங்கள் ரத்த அழுத்தம் சீராகும். இதற்கு காரணம் சோம்பில் உள்ள பொட்டாசியம் தான். இந்த பொட்டாசியம் தான் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவி செய்கிறது.

குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள் பால் சுரப்பை அதிகப்படுத்த சோம்பு தண்ணீர் அல்லது சோம்பு டீயை பருகுவதின் மூலம் குழந்தைக்கு தேவையான அளவு கூடுதல் பால் கிடைக்கும்.

உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்யும் பணியில் சோம்புக்கு நிகராக எதையும் கூற முடியாது. அந்த அளவிற்கு இது உடல் இருக்கக்கூடிய நச்சு கழிவுகளை வெளியேற்ற உதவி செய்கிறது.

ஜீரண தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கட்டாயம் சோம்பினை எடுத்துக் கொள்வதின் மூலம் அஜீரணம், மலச்சிக்கல், வீக்கம் செரிமான பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

எனவே மேற்கூறிய சோம்புவின் ஆரோக்கியமான நன்மைகளை அறிந்து விட்ட நீங்கள் இனி சோம்பினை தினமும் பயன்படுத்துவதை தவிர்க்காதீர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …