கலோரி இல்லா பலாப்பழம் இவ்வளவு நன்மைகளா? – அட பழத்தை மிஸ் பண்ணாம ஒரு பிடி பிடியுங்க..!!

 சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலாப்பழம் என்றால் நாக்கில் எச்சில் வரும். அந்த அளவு சுவையோடு அனைவரும் விரும்பக்கூடிய இந்த பலாப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

 குறிப்பாக பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தயாமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசிய சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை இது செய்கிறது.

 அப்படிப்பட்ட பலாப்பழம் கோடையில் அதிக அளவு கிடைக்கும் போது அதை நீங்கள் பயம் இல்லாமல் ஒரு பிடி பிடிக்கலாம். அப்படி நீங்கள் அந்த பலாப்பழத்தை உண்பதால் என்னென்ன நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை எந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 பலாப்பழத்தில் கிடைக்கும் நன்மைகள்

பலாப்பழத்தில் மிகக் குறைந்த அளவே கலோரிகள் இருப்பதால் இதய நோயாளிகள் இந்த பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் பொட்டாசியம் சத்து நிறைந்த இந்த பழம் உங்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 பலாப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி 6  சத்தானது ரத்தத்தில் இருக்கக்கூடிய ஹோமோசிஸ்டைன்  அளவை குறைக்க உதவுகிறது. இது குறைவதால் நமக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுத்து நிறுத்தக்கூடிய அற்புதமான பழமாக எந்த பழம் திகழ்கிறது.

 வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த பலாப்பழத்தை உட்கொள்வதின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் மெத்தனால், எத்தனால் போன்ற வேதிப்பொருட்களை விட வைட்டமின் சி யில் தான் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

 பலாப்பழத்தை அதிகமாக உண்ணக்கூடிய குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படாது. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் அனைவரும் பலாப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் அதிக அளவு இருக்கக்கூடிய பலாப்பழத்தை நீங்கள் உணவில் சாப்பிடும் போது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகாது. குறைந்த அளவே கொலஸ்ட்ராலை கொண்டிருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் பயமில்லாமல் பலாப்பழத்தை அளவோடு சாப்பிடலாம்.

கால்சியம், மெக்னீசிய சத்துக்கள் அதிகம் இந்த பலாப்பழத்தில் இருப்பதால் இது உங்கள் எலும்புகளை பலமாக்கும். எலும்புகளின் ஆடர்த்தியை அதிகரிக்க கூடிய  சத்து உள்ளது. இதன் மூலம் எலும்பு களை தாக்கக்கூடிய நோய்களின் தாக்கத்தை குறைக்கலாம். எனவே மிஸ் பண்ணாமல் கோடையில் பலாப்பழத்தை நீங்கள் அதிக அளவு சாப்பிடலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …