” நாக தோஷம் இருக்கா..!” – நாக பஞ்சமி விரதம் இருந்தா பாதிப்புகள் நீங்கும்…!

ஒருவருது ஜாதகத்தை வைத்து அவருக்கு நாக தோஷம் இருக்கிறதா என்பதை கணித்து விடுவார்கள். அப்படி நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்காது. அப்படி திருமணம் நடந்தாலும் பிள்ளை பேறுக்கான வாய்ப்பு தள்ளிக்கொண்டே செல்லும்.

 இவர்கள் கட்டாயம் நாக பஞ்சமி திதி  அன்று விரதம் இருந்து பூஜை செய்வதின் மூலம் இந்த தோஷத்தின் பாதிப்பிலிருந்து நிவர்த்தி பெற்று நாகங்களின் அருளைப் பெறுவதால் பிள்ளை பேறு கட்டாயம் கிடைக்கக்கூடிய வாய்ப்பினை அது வழங்கும் என்று கூறியிருக்கிறார்கள்.

 மேலும் நாக பஞ்சமி அன்று நீங்கள் பக்தி சிரத்தையோடு பாம்பு புற்று இருக்கும் கோயில்களுக்கு சென்று பாம்புக்கு பாலை பார்ப்பதன் மூலமும் அந்தக் கடவுளை வணங்குவதின் மூலமும் உங்களுக்கு நிவர்த்தி கிடைப்பதோடு நாக தோஷத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தெரிகிறது.

 எனவே மனதளவில் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் கட்டாயம் இந்த தினத்தில் நீங்கள் கடுமையான விரதத்தை மேற்கொண்டு ராகு கேதுவின் பாதிப்பிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்வதோடு உங்களுக்கு வேண்டியதை அவர்களிடம் கேட்பதின் மூலம் கட்டாயம் மனமிரங்கி எந்த தினத்தில் அவர்கள் உங்களுக்கு நன்மையை செய்வார்கள் என்பதை புரிந்து கொண்டு மறவாமல் எந்த தினத்தில் நீங்கள் உங்கள் விரோதத்தை கடைப்பிடியுங்கள் மாற்றம் உங்களைத் தேடி வரும்.

இந்த நாக பஞ்சமி ஆனது ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் ஏற்படும். இதில் மகளிர் மட்டுமல்ல ஆண்களும் நாக தெய்வத்தை வேண்டி விரதம் இருக்கலாம்.

ஆடி மாதம் சுக்கிர பஞ்சமிகள் ஆரம்பிக்கும் இந்த நாகபஞ்சமி விரதத்தை நீங்கள் செய்வதின் மூலம் 9 நாக தேவதைகளான ஆனந்தன், வாசுகி,கிஷகாலன்,அப்ஜன்,மகரி அப்ஜன், கங்குபாலன்,கார்க்கோடன்,குளிஜன்,பத்மன்  போன்றவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டே பெற்றுக் கொள் பால் பார்ப்பது நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 மேலும் இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் அவர்களது சத்திக்கு தகுந்தபடி தங்கத்திலோ அல்லது வேறு உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்திற்குள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

 அதுமட்டுமல்லாமல் இந்த பஞ்சமி தினத்தில் சிறிய வெள்ளி அல்லது செம்பில் செய்த நாகருக்கு வீட்டிலேயே பால், தேன் போன்றவற்றை அபிஷேகம் செய்து பூக்களால் அர்ச்சனை செய்து பால் பாயசம் நெய்வேத்தியம் செய்வதின் மூலம் பிள்ளை பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளை கிட்டும். மேலும் கணவருக்கும், சகோதரனுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …