” வாயை பிளக்க வைக்கும் அளவு பீர்க்கங்காய்..!” – இவ்வளவு சத்துக்களா?

 பச்சை நிற காய்கறிகளில் அதிக சத்து இருப்பதால் தான் மருத்துவர்கள் அனைவரும் பச்சை நிற காய்களை உண்ணச் சொல்லி கேட்டுக்கொள்கிறார்கள். அந்த வரிசையில் பச்சையாக இருக்கக்கூடிய பீர்க்கங்காய்க்குள் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா என்பதை தெரிந்தால் நீங்கள் பீர்க்கங்காயை விட மாட்டீர்கள்.

 தினமும் பீர்க்கங்காய் வேண்டும் என்று அடம் பிடித்து சாப்பிடும் அளவிற்கு இதில் சத்துக்கள் உள்ளது. இப்போது இந்த பீர்க்கங்காயில் எந்த அளவு சத்துக்கள் உள்ளது என்பதை இந்த கட்டுரையை பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

 பீர்க்கங்காயில் இருக்கும் சத்துக்கள்

👍பீர்க்கங்காயில் இருக்கக்கூடிய சத்துக்கள் மூலம் நீங்கள் தோல் நோய்களிலிருந்து விடுபட முடியும். அது மட்டுமல்லாமல் வயிற்றில் இருக்கக்கூடிய புண்களை தீர்க்கக் கூடிய ஆற்றல் எந்த பீர்க்கங்காய்க்கு உள்ளது.

 👍குழந்தைகள் அனைவருக்குமே சிறு வயது முதற்கொண்டு பீர்க்கங்காயை உண்ணுவதற்கு கொடுங்கள். அப்படி பீர்க்கங்காயை நீங்கள் கொடுக்கும் போது கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏதும் ஏற்படாது. பார்வை நரம்புகளை மேன்படுத்த கூடிய சக்தி இந்த பீர்க்கங்காய்க்கு உள்ளதால் பார்வை மேம்பாடாக இருக்கும்.

 👍மஞ்சள் காமாலை நோய்க்கு கடும் நிவாரணம் தரக்கூடிய இந்த பீர்க்கங்காயை நீங்கள் சாம்பாராகவும் அல்லது பச்சையாகவோ உண்பதின் மூலம் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு மஞ்சக்காமாலை நோயிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.

 👍பளபளப்பான மேனியை பெற விரும்புபவர்கள் கட்டாயம் உணவில் பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். பீர்க்கங்காய் வேக வைத்தோ, சாம்பாராகவோ நீங்கள் சாப்பிடும்போது உங்கள் சருமம் மேலும் பளபளப்பாகும்.

👍 ரத்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருமே தங்களது உணவில் இந்த பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்வதின் மூலம் இரத்த சோகையை நீக்கி இரத்தத்தை அதிகரிக்க கூடிய தன்மை உள்ளது.

👍உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தக்கூடிய இந்த பீர்க்கங்காயை வாரத்தில் இரண்டு நாட்கள் உங்கள் குடும்பத்தோடு சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

👍இதனால் மருத்துவமனை நோக்கி போக வேண்டும் என்ற அவசியமே இருக்காது. சர்க்கரை நோயாளிகளுக்கும் உகந்த காயாக இந்த பீர்க்கங்காய் உள்ளது. இதனை அதிகம் எடுத்துக் கொள்வதின் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

 👍உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பீர்க்கங்காயை தங்களது டயட்டில் சேர்த்துக் கொள்வதின் மூலம் எளிதில் உடல் இளைக்க இது உதவி செய்கிறது.

எனவே மறந்தும் பீர்க்கங்காய் வேண்டாம் என்று இலைகளிலோ தட்டுகளிலோ ஒதுக்கி வைக்காமல் ஒரு பிடி பிடித்தால் இந்த நன்மைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …