“சருமத்திற்கு நன்மை அளிக்கும் கடல் நீர் குளியல்..!” – நீங்களும் குளித்து பாருங்க பாஸ்..!!

சாதாரணமான நீரில் குளிப்பதை விட கடல் நீரில் நீங்கள் குளிப்பதன் மூலம் உங்கள் சருமத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா?

ஆனால் அது உண்மைதான். இதற்கு காரணம் கடல் நீரில் இருக்கக் கூடிய அபரிமிதமான மெக்னீசிய சத்து உங்கள் சருமத்தால் எளிதில் உறிஞ்சப்பட்டு இயற்கையான பொலிவை தருவதோடு சருமத்தில் இருக்கின்ற கிருமிகளை அழிக்கக்கூடிய ஆற்றல் பெற்றது.இது முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களையும் கொல்ல கூடிய தன்மை உடையது.

மேலும் உங்கள் சருமத்தை மிருதுவாக மாற்றக்கூடிய தன்மை இந்த கடல் நீருக்கு உள்ளது. கடல் நீரில் நீங்கள் குளிக்கும் போது அலை வேகமாக வந்து உங்கள் மேனியில் மோதுவதால் சருமம் இறுக்கமாக மாறக்கூடிய தன்மை கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல் மூளையின் செயல் திறனை அதிகரிக்க கூடிய தன்மை நீல நிற கடல் நீருக்கு உள்ளது. இந்த நீல நிற கடல் நீரில் குளிப்பதின் மூலம் உங்கள் மனநிலை அமைதி ஆவதோடு கண்களையும் நீங்கள் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.

இதயத்துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையை சரியாக வைத்துக் கொள்ள  கடல் நீர் உதவி செய்வதால் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் கடல் நீரில் நீங்கள் குளித்து விளையாடுவதின் மூலம் உங்கள் அழகு மேலும் மெருகேறும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இவை மட்டுமல்ல கடல் நீரில் உங்கள் தலை நன்கு முங்கி குளிப்பதின் மூலம் தலையில் முடிகளில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வினை தரும். குறிப்பாக பொடுகு தொல்லையிலிருந்து எளிதில் விடுதலை பெற இந்த கடல் நீர் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

முடி உதிர்வதை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முடிக்கு பளபளப்புத் தன்மையை தரக்கூடிய ஆற்றல் இந்த கடல் நீருக்கு உள்ளது. இது நுண்ணுயிரிகளின் தொற்று தலைமுடிகளின் இருந்தால் அவற்றை நீக்க உதவி செய்கிறது.

எனவே நீங்கள் கடல் நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டாம். சமயம் கிடைக்கும் போதெல்லாம் கடல் நீரில் குளியல் போடுங்கள். மகிழ்ச்சியோடு உங்கள் வாழ்வை வாழ்வதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக உங்கள் மேனி அழகை பராமரிக்க இது உதவி செய்யும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …