“சருமம் ஜொலிக்க சர்க்கரை போதும்..! – இனி நீங்களும் யூஸ் பண்ணுங்க..!

தன்னை எப்போதும் அழகாக வெளிப்படுத்த விரும்பக் கூடியவர்கள் வீட்டிலிருக்கும் சர்க்கரையைக் கொண்டே விதவிதமான முறையில் உங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ள முடியும்.

அந்த வரிசையில் இந்த கட்டுரையில் சர்க்கரையைக் கொண்டு உங்கள் சருமத்தை எப்படி பளிச் என்று மாற்றலாம் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சர்க்கரையை கொண்டு செய்யப்படும் அழகியல் குறிப்புகள்

வெள்ளை சர்க்கரையோடு சிறிதளவு எலுமிச்சம் சாறை சேர்த்து அதை உங்கள் சருமம் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்வதின் மூலம் சருமத்தில் இருக்கின்ற இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி உங்கள் சருமம் பொலிவாகும்.

சர்க்கரையை நீரில் கரைத்து அந்த நீரை உங்கள் முகத்தில் நன்கு தேய்த்து விடுங்கள். சிறிது நேரம் கழித்த பிறகு உங்கள் முகத்தை கழுவி விடுங்கள்.இது முகத்தில் இருக்கக்கூடிய எண்ணெய் பிசுக்கை நீங்கி உங்கள் முகத்தை பளபளப்பாக மாற்றும்.

கஸ்தூரி மஞ்சள் ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில் ஐந்து சொட்டுக்கள் இதனோடு சர்க்கரையும் கலந்து ஒன்றாக உங்கள் முகத்தில் பூசி விடுங்கள். அரை மணி நேரம் கழித்த பிறகு நீங்கள் உங்கள் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதின் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு முகமும் பளபளப்பாக தெரியும்.

முகத்தில் இருக்கக்கூடிய குட்டி முடிகளை அகற்ற சர்க்கரையோடு சோள மாவு, முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்கு கலந்து உங்கள் முகத்தில் தடவி விடுங்கள். இதனைப் போல நீங்கள் தொடர்ந்து வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்வதின் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய சின்ன சின்ன முடிகள் நீங்கிவிடும்.

மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் கட்டாயம் பயன்படுத்துவதன் மூலம் பைசா செலவில்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே உங்கள் முக அழகை மட்டும் அல்லாமல் சரும அழகையும் அதிகரித்துக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுக்கு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.

எனவே சர்க்கரையை அழகு இயல் குறிப்புகளை பயன்படுத்தி நீங்கள் அடைந்த அனுபவங்களை எங்களோடு நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …