“ஆண்களுக்கான அருமையான அழகு குறிப்பு..!” – ஃபாலோ பண்ணுங்க பாஸ்..!

பெண்களைப் போலவே ஆண்களும் இன்று தங்களை மிக அழகாக வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அதற்காக ஆண்களுக்கு உரிய அழகு நிலையங்களுக்கும் அவர்கள் செல்கிறார்கள். அப்படி அழகு நிலையங்களுக்கு சென்று பணத்தை செலவு செய்வதை தவிர்த்து உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எளிதாக உங்களை அழகுப்படுத்திக் கொள்ள முடியும். இந்தக் கட்டுரையில் ஆண்களுக்கு உரிய முக்கிய அழகு குறிப்பு – களை படித்து தெரிந்து கொள்ளலாம்.

men beauty tip

ஆண்களுக்கான உரிய அழகு குறிப்புகள்

வெள்ளரிக்காயை மைய அரைத்து அதனோடு ஒரு ஸ்பூன் தேனை சேர்த்து விட்டு நன்கு கலந்து, அதை உங்கள் முகத்தில் நீங்கள் தேய்த்து விடுங்கள். இவ்வாறு செய்துவிட்டு அந்த பேஸ் பேக் நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் உங்கள் முகத்தை கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் தோல் மென்மையாகுவதோடு மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும்.

மேலும் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு பால், கடலை மாவு இவற்றை ஒன்றாக கலந்து ஆண்கள் அவர்கள் சருமத்தில் தேய்த்து குளித்து வந்தால் சருமத்தில் தோன்றும் அனைத்து விதமான பிரச்சனைகளும் சரியாகும்.

men beauty tip

வெளியே சென்று வரும் ஆண்களின் முகத்தில் இருக்கும் கருப்பு நீங்க ஒரு பவுலில் தக்காளி சாறு மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தயிர் சேர்த்து கலந்து அதை உங்கள் முகத்தில் மற்றும் கைகால் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே ஊற விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் உங்கள் முகத்தில் மற்றும் கைகால் பகுதிகளில் இருக்கக்கூடிய கருப்புகள் எளிதில் மறையும்.

ஆண்களின் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் மற்றும் கருப்பு நீங்க பப்பாளியை அரைத்து உங்கள் முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். இதனை அடுத்து நீங்கள் வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை கழுவி விடுங்க.ள் பப்பாளியில் இருக்கும் பிளிச்சிங் தன்மையால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் அடுக்கு முழுமையாக நீங்கி உங்கள் முகம் பார்ப்பதற்கு அஜித்தை போல் இருக்கும்.

men beauty tip

ஆண்களின் முகத்தில் இருக்கக்கூடிய முகப்பருக்களை வெளியேற்ற கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொண்டு அதை நன்கு அரைத்து அதனோடு ஆரஞ்சு பழ சாறை கலந்து உங்கள் முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் வரை இந்த கலவை உங்கள் முகத்தில் இருக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து நீங்கள் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இப்படி தொடர்ந்து செய்வதால் உங்கள் முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படாது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …