ஆரோக்கியமான எதிர்காலம்.

நாம் வெற்றி இலக்கை நோக்கி பயணிக்கும் பொழுது நமது உடல் அதற்கு ஏற்ற வகையில் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நான் அந்த இலக்கை  தொய்வின்றி அடைய முடியும். தற்போது உள்ள தலைமுறை நண்பர்களிடையே ஒருவிதமான கதை பேசப்பட்டு வருகிறது. அடிப்படையில் அந்த கதை மிகவும் உண்மையானது தான்.

தனது வாழ்க்கையையும் தனது பொருளாதாரத்தையும் உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று இரவு பகல் பாராது இன்றைய தலைமுறையினர் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்கள் 25 வயதிலிருந்து 60 வயது வரை சேர்த்து வைத்த பணத்தை எப்படி செலவிடுகிறார்கள் என்பது தெரியுமா? ஓடி ஓடி சம்பாதித்த பணத்தை 55 வயதுக்கு பின்னால் அவர்கள் தொலைத்த ஆரோக்கியத்திற்காக செலவிடுகிறார்கள்.அதை தவிர்க்க வேண்டும் என்றால் கீழே கூறப்பட்டுள்ள கருத்துக்களை நீங்கள் கூர்ந்து படித்து கடைபிடித்தாலே போதும்.

நம்பிக்கை தான் வெற்றி:

 தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்” என்ற சொற்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில் நமது வாழ்க்கை அமைந்துவிட்டால் நம்பிக்கையோடு வெற்றி இலக்கை நாம் எட்டிப் பிடித்து விடலாம். பூக்களில் தேன் இருக்கிறதா? இல்லையா? என்பது தேனீக்களுக்கு  பிரச்சனையே இல்லை. ஆனால் தேன் இருக்கும் பூக்களை ஒவ்வொரு நிமிடமும் தேடி சென்று தேனை சேகரிப்பது என்பது  அதனுடைய கடமையாகவே எண்ணி தினமும் செய்கிறது. 

17 முறை தோல்வியை தழுவிய தழுவிய கஜினிமுகமது ஒரு சிலந்தி வலை பின்னுவதை  பார்த்தான்.பலமுறை தோல்வியுற்ற அந்த சிலந்தியானது  கடைசியாக வெற்றியடைந்தது. இதைப் பார்த்த உடனே தான் அவனுக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. பின்பு மீண்டும் படையெடுத்து வெற்றியடைந்தார். ஒவ்வொருவரும் தோல்வியை கண்டு துவளாமல் நம்பிக்கையோடு எழுந்தாலே வெற்றியை நம் வசப்படுத்தலாம்.

எப்போதும் உங்கள் சிந்தனை நேர்மறையாக தான் இருக்க வேண்டும் .அப்படி இருந்தால் தான் நீங்கள் வெற்றி இலக்கை மிக எளிதில் எட்ட முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …