வீட்டில் செல்வம் கொழிக்க : குடும்பத்தில் மட்டுமல்லாமல் வீட்டில் கிரகக்கூறுகள் சரியான முறையில் இருந்தால் தான் அந்த வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் அனைத்தும் ததும்பி வழியும். அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்க அந்த வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் கட்டாயமாக ஃபாலோ செய்ய வேண்டிய சில ஆன்மீக டிப்ஸ் உள்ளது.
அந்தக் குறிப்புகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பின்தொடர்ந்து வந்தால் நீங்கள் நினைப்பது போல் உங்கள் வீட்டில் அமைதி செல்வம் இன்பம் எதற்கும் குறை ஏதும் வராமல் இருக்கும்.
டிப்ஸ் 1
நீங்கள் ஒருவருக்கு பணம் கொடுக்க நினைத்தாலோ அல்லது கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தாலோ வாசல் படியில் நின்று கொண்டு பணத்தைக் கொடுக்கக் கூடாது. பணத்தை கொடுப்பவரும் பணத்தை வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளேவோ அல்லது வெளியேவோ சென்று தான் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டும்.
டிப்ஸ் 2
பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடக்க வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் கோரையில் நீங்கள் அதனை செய்வது சிறப்பாக இருக்கும் அப்படி செய்யும் போது அந்த பணம் திரும்ப கிடைக்கும்.
டிப்ஸ் 3
வீட்டில் இருக்கும் வாசல் படி, பயன்படுத்தக்கூடிய உரல் ஆட்டங்கள் அம்மி இவற்றில் அமர்ந்து கொண்டு பேசுவதோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடுவதோ கூடாது.
டிப்ஸ் 4
இரவு நேரங்களில் வீட்டில் இருக்கும் பால் ,மோர், தயிர் போன்றவற்றை அடுத்தவர்களுக்கு கொடுக்கக் கூடாது. வெற்றிலை வாழை வெற்றிலை இவற்றை வாட விடக்கூடாது.
டிப்ஸ் 5
வீட்டில் இருப்பவர்கள் கோபத்தில் கெட்ட வார்த்தையை பேசுவதை தவிர்ப்பது மிகச் சிறந்தது. குறிப்பாக எருமை மாடே, சனியனே,ஏழவு போன்ற வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல் பெருகும்.
டிப்ஸ் 6
வீட்டில் தெய்வம் ஏற்றும் போது அந்த தீபம் காற்றில் ஆடாமல் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தீபத்தை ஆப் செய்யும்போது ஒரு பூவின் மூலமோ அல்லது திரியை உள்ளாக எடுத்துவிட்டு அணைக்கலாம்.
இங்கு அனைக்கலாம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை விட மலையேற்றுவது என்று கூறுவது தான் சிறப்பாக இருக்கும் ஏனெனில் அணைப்பது என்ற வார்த்தை கூட எதிர்மறை விளைவுகளை தான் ஏற்படுத்தும்.
டிப்ஸ் 7
கந்தையானாலும் கசக்கி கட்ட வேண்டும் என்றும் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதனை உணர்ந்து கிழிந்த துணிகளை உடுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
டிப்ஸ் 8
வீட்டுக்குள் நாம் பயன்படுத்தக்கூடிய உப்பு மற்றும் கடுகு போன்றவற்றை சிந்தக்கூடாது அதுபோலவே உணவை சமைப்பதற்காக கழுவக்கூடிய அரிசியையும் கீழே சிந்தாமல் இருக்க வேண்டும்.
டிப்ஸ் 9
வீட்டில் எப்போதும் சுப நிகழ்வுகள் நிகழ்வதற்கு மந்திரங்களை ஒலித்த படி இருப்பது நல்லது. எனவே இல்லம் தோறும் காலை நேரங்களில் பக்தி பாடல்களையும் மாலை நேரங்களில் பக்தி பாடல்களையும் கேட்பதன் மூலம் சுபிட்சம் நிலவும்.