.”சந்தைக்கு புதிதான வெற்றிலை பஜ்ஜி..!” – நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!

அந்தி மயங்கும் மாலை நேரம் என்றால் பஜ்ஜி கடைகளில் கூட்டம் அலைமோதும். அதிலும் மழை பெய்து விட்டால் பஜ்ஜிக்கும், வடைக்கும் நீண்ட கியூவில் நின்று அதை ரசனையோடு அனுபவித்து சாப்பிடக்கூடிய மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அந்த வகையில் வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி என பல வகைகளில் பஜ்ஜிகளை சுவைத்திருப்போம். அதேபோல உளுந்து வடை, ராகி வடை, முப்பருப்பு வடை, ஆமவடை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதையெல்லாம் சாப்பிட்ட பிறகும் இன்னும் ஏதாவது சாப்பிட்டாலும் அது உங்களுக்கு பிரச்சனையை தராமல் எளிதில் ஜீரணத்தை தூண்டக்கூடிய வகையில் இருந்தால் அதையும் ஒரு பிடி பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்தால் உடனே நீங்கள் வெற்றிலை பஜ்ஜியை செய்து சாப்பிடலாம்.

வெற்றிலை பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள்

  1. ஐந்து வெற்றிலை
  2. 2.கடலை மாவு 200 கிராம்
  3. 3.அரிசி மாவு 50 கிராம்
  4. 2 டேபிள் ஸ்பூன் அளவு மைதா
  5. மிளகாய் தூள்
  6. தேவையான அளவு உப்பு
  7. பெருங்காயத்தூள்

செய்முறை

 முதலில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு இவற்றை நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதில் தேவையான அளவு உப்பை சேர்த்து மிளகாய் தூளையும் போட்டுக் கொள்ளுங்கள்.

 இப்போது இந்த பொருட்களில் நீரினை விட்டு கட்டி சேராமல் பஜ்ஜி போடக் கூடிய பக்குவத்தில் நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து இதில் போதுமான அளவு பெருங்காயத்தூளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

 இப்போது பஜ்ஜி போடுவதற்கான மாவு தயாராக உள்ளது. இதனை அடுத்து நீங்கள் வெற்றிலையை நன்கு கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு ஈரம் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 இப்போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி எனண்ணெய் சூடாகும் வரை காத்திருக்கவும். எண்ணெய் சூடானவுடன் நீங்கள் வெற்றிலையை பஜ்ஜி மாவில் முக்கி அப்படியே எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்கள்.

 இப்போது சூடான சுவையான உடலுக்கு ஆரோக்கியமான வெற்றிலை பஜ்ஜி தயாராக உள்ளது. நீங்களும் இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …