80 மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரும் நடிகருமாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் பாக்கியராஜ்.
தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி நட்சத்திர இயக்குனராக புகழ்பெற்று வந்தார். தமிழ் திரையுலகில் நடிகர் , வசன எழுத்தாளர் ,திரைக்கதை அமைப்பாளராக இருந்துள்ளார்.
இயக்குனர் பாக்கியராஜ்:
மேலும், இயக்குனர் ,சிறப்பு வேடமிட்டு நடிக்கும் நடிகர், தயாரிப்பாளர், பத்திரிக்கையாளர், நிகழ்ச்சி நடுவர் இப்படி பல பரிமாணங்களில் தனது திறமையை வெளிக்காட்டி புகழ் பெற்றவர் தான் பாக்கியராஜ்.
இவர் சினிமா மீது உள்ள மிகுந்த ஆர்வத்தினால் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி சினிமா எடுக்கும் கலைகள் கற்றுத் தெரிந்தார்.
16 வயதினிலே ,கிழக்கே போகும் ரயில் , சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களில் அவருடன் பணியாற்றி உதவி இயக்குனராக திரைப்பட கலையை கற்றுக் கொண்டார்.
அதன் பிறகு பாரதிராஜா பாக்யராஜை தன்னுடைய புதிய வார்ப்புகள் படத்தில் வசனகர்த்தாவாக மட்டும் இன்றி கதாநாயகனாகவே அறிமுகம் செய்து வைத்தார்.
பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் “சுவரில்லாத சித்திரங்கள்” 1979 இல் வெளியான இத்திரைப்படத்தை தொடர்ந்து ஒரு கை ஓசை, மௌன கீதங்கள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இயக்கிய படங்கள்:
அத்துடன் இன்று போய் நாளை வா ,விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், பொய்சாட்சி, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், சின்ன வீடு, வீட்ல விசேஷங்க ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சொக்கத்தங்கம், பாரிஜாதம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி இயக்குனராக பெரும் புகழ்பெற்றார்.
இதனடி ஹீரோவாகவும் குணசேத்திர நடிகராகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகராகவும் தமிழ் சினிமாவால் பார்க்கப்பட்டு வந்தார்.
நடிகர் பாக்யராஜ். தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்த போது தன்னுடைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரவீனா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், பாபா ருக்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
பாக்யராஜின் இந்த காதல் திருமண வாழ்க்கை சில வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. ஆம் பிரவீனா நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்து விட்டார்.
முதல் மனைவி மரணம்:
இதையடுத்து நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பாக்கியராஜ் . இவர்களுக்கு பிறந்த குழந்தைகள்தான் சரண்யா பாக்யராஜ் மற்றும் சாந்தனு பாக்யராஜ் .
இதில் சாந்தனு தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் நடிகராக பார்க்கப்பட்ட வருகிறார். சாந்தனு பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும் .
ஆனால் அவரது மகள் சரண்யாவை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. திரைப்படங்களில் கூட நடிகையாக நடித்திருக்கிறார் சரண்யா .
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த பாரிஜாதம் என்ற தமிழ் திரைப்படத்தில் பிருத்திவ் ராஜிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் சரண்யா அந்த படத்தில் பிரித்திவிராஜுடன் நடிக்கும் போது காதல் கிசுகிசுக்கப்பட்டு இருவரும் காதலித்து வருவதாக செய்திகளில் வெளியாகியது.
மகள் சரண்யா பாக்யராஜ் தற்கொலை முடிவு?
ஆனால், இது வெறும் வதந்தி செய்து என கூறப்பட்டது. வெளிநாட்டிற்கு சென்று பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒருவரை காதலித்தார் சரண்யா பாக்கியராஜ்.
ஆனால், அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் கிட்டத்தட்ட மூன்று முறை தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்.
தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்திருக்கும் சரண்யா பாக்யராஜ் திருமணமே வேண்டாம் என ஒதுக்கி வருகிறார்.
39 வயதாகும் அவர் இப்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடை அணிகலன்களை விளம்பரம் செய்யும் ஷாப்பிங் அண்ட் ரீடைல் தொழிலை செய்து வருகிறார்.
தற்போதைய நிலை:
மேலும் நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளிவந்த அவரது 59வது திரைப்படமான “மேன்” படத்தில் சரண்யா பாக்கியராஜ் க்ரீன் ப்ளே வேலை செய்துள்ளார்.
மேலும் சமீபத்தில் தன்னுடைய தம்பி மனைவியான கி கி விஜய்க்கு டிசைன் செய்த ஆடை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் .
தொடர்ந்து இப்படி தன் மனதிற்கு பிடித்தமான வேலைகளில் அதிக கவனத்தை செலுத்தி வரும் சரண்யா பாக்யராஜ் தனக்கு திருமணமே வேண்டாம் என ஒதுக்கி வாழ்ந்து வருவது குறிப்பிடுத்தக்கது.