தன் முதல் மனைவியை பிரிந்த பரிதவிப்பில் இருந்த பாக்யராஜ் இரண்டாவதாக பூர்ணிமாவை எப்படி திருமணம் செய்து கொண்டார் என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இது குறித்த தனது அனுபவங்களை கல்யாண மாலை நிகழ்ச்சியில் பேசிய பாக்கியராஜ் முதல் மனைவியின் இறப்புக்கு பின்னால் மனநிலை சரியில்லாமல் இருந்த அவர் கோவா, மும்பை என பல பகுதிகளில் சுற்றி இருக்கிறார்.
மும்பையில் இருக்கும் போது பிஆர்ஓ செல்வம் நான் தங்கி இருந்த ஹோட்டலில் தங்கி இருந்தார். எதர்ச்சியாக அவரை சந்தித்தபோது எதற்காக இங்கு வந்தீர்கள் என்று வினவ, அவர் பூர்ணிமா மலையாள பட சூட்டிங் ஒன்றுக்காக பாரிஸ் செல்ல இருக்கிறார், அவரை வழி அனுப்ப வந்திருந்தேன் என்றார்.
இதனை அடுத்து பூர்ணிமாவிடம் சென்று செல்வம் நான் தங்கி இருக்கின்ற விஷயத்தை சொல்ல பூர்ணிமா எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள். வீட்டுக்கு வந்து டிபன் சாப்பிட்டு போங்க என்று பாசத்தோடு அழைத்தார்.
இந்நிலையில் நான் டிபன் சாப்பிடுவதற்கு நேரமில்லை. டீ வேண்டும் என்றால் குடித்துவிட்டு செல்கிறேன் என்று கூறி அவரோடு சென்றேன். அந்த சமயம் நவராத்திரி என்பதால் அவர்கள் படு பிஸியாக இருந்தார்கள்.
மேலும் நவராத்திரியின் சிறப்பைப் பற்றி என்னிடம் பூர்ணிமா பேசிக் கொண்டிருந்த சமயத்தில் எனக்கு ஏன் அவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று யோசனை வந்தது. எனினும் இதை பூர்ணிமாவிடம் கேட்பதற்கு சற்று தயக்கமாக இருந்தது.
அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்த நான் பூர்ணிமாவிடம் பாரிஸ் சென்று விட்டு எனக்கு ஒரு போன் செய்கிறாயா? என்று கேட்டேன். ஆனால் பூர்ணிமாவிடமிருந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாக எந்த பதிலும் வராத நிலையில், என்னுடைய உதவியாளர் ஒருவர் பூர்ணிமா உங்களுக்கு தொடர்ந்து கால் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறினான்.
உடனே அவனை திட்டி விட்டு நான் பூர்ணிமாவை தொடர்பு கொண்டேன். அந்த சமயத்தை பயன்படுத்தி என் காதலை அவரிடம் கொட்டி விட்டேன். உடனே அவரும் அம்மாவிடம் பேசுங்கள் என்று சொன்னார்.
நான் பெற்றோர்களிடம் பேசிய போது அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள். இதன் மூலம் எங்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்கள் என்ற நிகழ்வை படு ஜோராக பாக்கியராஜ் கூறினார்.