அடடா …வயது 43 தான்… மரணத்தை தழுவிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் பரத் கல்யாண் மனைவி…!

விஜய் டிவியில் தற்போது சக்கை போடு போட்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. டிஆர்பி ரேட்டை அதிகப்படுத்தக்கூடிய இந்த சீரியல் ரசிகர்களால் விரும்பி பார்க்கக் கூடிய தொடர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தற்போது மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரின் மனைவி திடீர் என மரணம் அடைந்ததை அடுத்து சின்னத்திரை வட்டாரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

மேலும் இந்த நடிகர் 90 காலகட்டங்களில் ஏராளமான சீரியல்கள் நடித்த பரத் கல்யாண் தான். சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

 தற்போது இந்த பாரதி கண்ணம்மா சீரியலில் இவர் டாக்டர் பாரதி வேலை செய்யும் ஹாஸ்பிடல் இன் டீனாக நடித்து வருகிறார்.

 இவரது மனைவி பிரியா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது .கடந்த சில மாதங்களாகவே பேலியோ டயட் முறையை பின்பற்றி வந்திருக்கும் 43 வயதான பிரியா தற்போது மரணம் அடைந்திருக்கிறார்.

 இவர்தான் பாலோ செய்த பேலியோ டயட்  பக்க விளைவு காரணமாகவே இவருக்கு சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த பிரியாவுக்கு சில மாதங்களாகவே உடல்நிலை மிகவும் மோசமானது.

 இதனைத் தொடர்ந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சர்க்கரை நோய் அதிகமானதால் இவர் கோமா நிலைக்கு சென்று இருக்கிறார்.

 எப்படியும் மீண்டு வருவார் என்று நினைத்திருந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு மரணம் அடைந்து விட்டார். தற்போது இந்த செய்தி சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

மேலும் மனைவியை இழந்து வாடும் பரத் கல்யாண் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு சின்னத்திரை நடிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam