பாரதி பாஸ்கர் யார் தெரியுமா..? பலரும் அறிந்திடாத தகவல்கள்..!

பட்டிமன்ற பட்டிமன்ற பேச்சாளராக தமிழ் மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் பாரதி பாஸ்கர்.

இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி வந்த வாங்க பேசலாம் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

குறிப்பாக சன் தொலைக்காட்சியில் நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானபெண் பேச்சாளராக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் :

இவர் பேச்சாளர் என்பதையும் தாண்டி கவிஞர், எழுத்தாளர், தொகுப்பாளர், தமிழ் இலக்கிய ஆர்வலர்,மகாகவி பாரதியின் தீவிர ரசிகை, பாரதி கண்ட புதுமைப் பெண் என புகழ் பாராட்டப்பட்டு வருகிறார்.

மேலும், இந்தியாவின் பிரபல வங்கிகளில் ஒன்றான சிட்டி பேங்கில் மூத்த துணை தலைவர், என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி மிகச்சிறந்த பெண்மணியாக பார்க்கப்பட்டு வருகிறார்.

அத்துடன் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என குடும்ப வாழ்க்கையும் சிறப்பான முறையில் நடத்தி வெற்றி பெண்மணியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

1969 ஆம் ஆண்டு பிறந்த பாரதி பாஸ்கரின் தந்தை தலைமை ஆசிரியராகவும் தாய் கல்லூரியில் தங்கம் பதக்கம் வென்ற ஆபீசராகவும் பணியாற்றி வந்தார்.

பள்ளிப்படிப்பு:

பருவத்தில் இருந்து செல்லமாக வளர்க்கப்பட்ட பாரதி பாஸ்கர் பள்ளி திருவண்ணாமலையில் உள்ள அந்தோனியர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார்.

அப்போதே பள்ளியில் படிக்கும்போது ஏராளமான பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிக்காட்டி அங்குள்ள ஆசிரியர்கள், சக மாணவர்களை பிரம்மிக்க செய்து வந்தார்.

பிறகு அழகப்பர் தொழில்நுட்ப கல்லூரியில் பயின்றார். பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் வணிக வேளாண்மையில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார்.

இதனிடையே அவருக்கு வேலை என்று எடுத்து கொண்டோமானால் சிட்டி வங்கியில் துணைத் தலைவராக பணியாற்றியும் வருகிறார்.

திருமணம், குழந்தைகள்:

இவர் சிட்டி பேங்கில் வேலை செய்து கொண்டிருந்தபோது திரு பாஸ்கர் லட்சுமணன் என்ற (TVS logistics of global) என்ற நிறுவனத்தின் CEO’வை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு நிவேதிதா, காவியா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். தெளிவான உச்சரிப்புடன் நல்ல கருத்துடன் பட்டிமன்றங்களில் பேசும் திறமை கொண்ட இவர் பட்டிமன்ற பேச்சாளராக ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

இதுதவிர எழுத்து படைப்புகள் என்று எடுத்தோமானால்.. கல்கியின் சிறுகதைகள், தின மணியில் கட்டுரைகள், அவள் விகடனில் நீ நதி போல ஓடிக்கொண்டிரு உள்ளிட்ட தொடர் கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

எழுத்து படைப்புகள்:

இதனிடையே சிறகை விரி, அப்பா என்னும் வில்லன் போன்ற நூல்களையும் இவர் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல நாடுகளுக்கு சென்று அங்கேயும் பட்டிமன்றங்களில் தமிழ் பேசி அசர வைத்து வருகிறார்.

இதுவரை ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் பேசி இருக்கும் பாரதி பாஸ்கர் பல விருதுகளையும் குவித்திருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam