தா சொல்லியும் கேக்கல.. இதுக்கு காரணம் சேரன் தான்.. நடிகர் பார்த்திபன் கிளப்பிய பிரச்சனை..!

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத இயக்குனராக விளங்கிய பார்த்திபன் புதிய பாதை என்ற படத்தை இயக்கியதின் மூலம் தமிழ் மக்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

அது மட்டும் இல்லாமல் புதிய பாதை படத்தில் தன்னோடு இணைந்து நடித்த நடிகை சீதாவை காதலித்து வந்த நிலையில் சீதாவின் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

சீதா சொல்லியும் கேட்கல..

நடிகர் பார்த்திபன் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவரது முதல் படமே சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது.

 அதனை அடுத்து உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், இவன், குடைக்குள் மழை, வித்தகன், ஒத்த செருப்பு, கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

ஹவுஸ்புல் திரைப்படமும் சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவர்கள் எடுத்த படங்கள் போதுமான வெற்றியை தராமல் ஃபிளாப்பானதை அடுத்து நடிகராக களம் இறங்கினார்.

அந்த வகையில் இவர் 1997 ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம். இந்த படத்தை இயக்கியவர் ஆட்டோகிராப் படத்தை எடுத்த இயக்குனர் சேரன்.

மேலும் இந்த படத்தில் பார்த்திபன் நடிக்கும் போது சேரன் வைத்திருந்த கிளைமாக்ஸ் காட்சி பிடிக்காததை அடுத்து அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்த பார்த்திபன் படத்தின் கிளைமாக்ஸ் கட்டாயம் தான் சொன்னது படி மாற்றினால் படம் வெற்றி பெறும் என்று சொல்லி இருக்கிறார்.

இதுக்கு காரணம் சேரன் தான்..

ஆனால் சேரனோ இவரது முடிவை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. அவர் வைத்திருந்த கிளைமாக்ஸ் தான் மக்கள் மத்தியில் செல்லுபடியாகும் என்று பலமுறை பார்த்திபனுக்கு சொல்லியும் பார்த்திபன் கேட்பதாய் தெரியவில்லை.

இதனை அடுத்து நடிகை சீதாவிடம் இந்த விஷயம் செல்ல நடிகை சீதாவும் பார்த்திபனிடம் புதிய பாதை படத்தில் எப்படி தயாரிப்பாளர் உங்களது கிளைமாக்ஸை மாற்ற சொல்லியும் நீங்கள் விடாப்பிடியாக நீங்கள் நினைத்த கிளைமாக்ஸ் தானே வைத்து வெற்றி பெற்றீர்கள்.

அது போல இந்த படத்தில் சேரன் சொல்வதை கேளுங்கள் என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் சேரனிடம் இந்த படத்திற்கு நான் சொன்னது போல கிளைமாக்ஸ் செய்யும். நீங்கள் நினைப்பது போல கிளைமாக்ஸ் செய்யும் எடுத்து விடுங்கள்.

இதனை வேறு சில இயக்குனர்களிடம் காட்டி இறுதி செய்து கொள்வோம் என்று சொல்லி இருக்கிறார்.

அதை எடுத்து வேறு வழியில்லாமல் இயக்குனர் சேரன் பார்த்திபன் சொன்னது போல இரண்டு கிளைமாக்ஸ்களை எடுத்து முடித்து விட்டார். இந்நிலையில் இந்த கிளைமாக்ஸ் காட்சிகளை டைரக்டர் வாசு சார் மற்றும் கே எஸ் ரவிக்குமார் போன்ற இயக்குனர்களை அழைத்து காட்டும் போது அவர்கள் சேரன் சொன்ன கிளைமாக்ஸ் தான் ஒர்க் அவுட் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள்.

நடிகர் பார்த்திபன் கிடப்பிய பிரச்சனை..

இதனை அடுத்து அந்த இயக்குனர்கள் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டு படத்தில் சேரன் சொன்ன கிளைமாக்ஸ் வையுங்கள் பார்க்கலாம் படம் எப்படி ஹிட் ஆகிறது என இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கூறிவிட்டார்.

மேலும் பார்த்திபன் சார் சொன்ன அந்த கிளைமாக்ஸ் வைக்காமல் இயக்குனர் சேரன் சொன்ன அந்த கிளைமாக்ஸ் படத்தில் வைத்ததை அடுத்து இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.

தற்போது இந்த விஷயம் தான் சீதா சொல்லியும் கேட்க இதுக்கு காரணம் சேரன் தான் என்ற ரீதியில் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version