பாக்கியலட்சுமி சீரியலில் புடவை சுத்திகிட்டு வந்த நடிகையா இது..? மாடர்ன் உடையில் மஜா போஸ்..!

தமிழில் சீரியல் மூலமாக அறிமுகமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுசித்ரா ஷெட்டி. பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இதன் மூலமாக இவர் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார்.

வழக்கம் போல இவரும் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை கிடையாது. பெரும்பாலும் சீரியலிலும் சினிமாவிலும் இருக்கும் நடிகைகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்குதான் இங்கு அதிகமாக வாய்ப்புகளும் வரவேற்பும் கிடைக்கிறது.

அந்த வகையில் சுசித்ராவிற்கும் பாக்கியலட்சுமி சீரியல் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து சீரியல் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு சீரியல் நடிகையாக சுசித்ரா இருந்து வருகிறார்.

புடவை சுத்திகிட்டு வந்த நடிகை:

கணவரால் ஏமாற்றப்படும் பாக்யா தனது சொந்த காலில் நின்று எப்படி வாழ்க்கையில் ஜெயிக்கிறார் என்பதை பேசும் விதமாக பாக்கியலட்சுமி சீரியல் இருக்கும். நிஜ வாழ்கையிலுமே சுசித்ரா அந்த மாதிரியான ஒரு பெண்தான். அவருடைய சம்பாத்தியத்தில்தான் நிறைய விஷயங்களை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது உழைப்பிலேயே ஒரு முறை பென்ஸ் கார் ஒன்றைக் கூட வாங்கினார் சுசித்ரா. அதன் புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் அதிக பிரபலமாகி வந்தது. சீரியல் பார்க்கும் குடும்ப பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் சுசித்ரா.

பாக்கியலட்சுமி சீரியல்

இந்த நாடகத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் இன்னசெண்டான கதாபாத்திரமாக இருக்கும். ஆரம்பத்தில் படிக்காத வெளி உலகமே தெரியாத ஒரு சராசரி பெண்ணாக பாக்கியா கதாபாத்திரம் இருந்து வரும்.

தமிழ் சமூகத்தில் போன தலைமுறை வரை பெரும்பாலான பெண்கள் இப்படி உலகம் தெரியாமல் வளர்க்கப்படும் பெண்களாகதான் இருக்கின்றனர் எனவே அவர்கள் அனைவருக்கும் கனெக்ட் ஆகும் ஒரு கதாபாத்திரமாக பாக்யாவின் கதாபாத்திரம் இருந்தது.

மாடர்ன் உடையில் மஜா போஸ்:

கணவரால் ஏமாற்றப்பட துவங்கிய பிறகு வெளி உலகத்தைப் பற்றி அறிய துவங்கும் பாக்யா பிறகு ஆங்கிலம் கற்றுக் கொள்வது போன்ற பல விஷயங்களை செய்ய தொடங்குவார். இப்படி வளர்ச்சியை பெரும் பாக்கியா கதாபாத்திரம் அதற்குப் பிறகு நாடகத்தில் செய்யும் விஷயங்கள் வெகுவாக மக்களை கவர்ந்தது.

அதனை தொடர்ந்து சுசித்ராவிற்கான ரசிகர்கள் என்பது அதிகரிக்க துவங்கியது. இந்த நிலையில் சீரியலில் எப்போதும் புடவை கட்டி வரும் சுசித்ரா சமீபத்தில் கொஞ்சம் மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். எப்போதும் நாடகத்தில் வயதான கதாபாத்திரமாக தெரியும் இவர் இந்த உடையில் பார்க்கும் பொழுது வயது குறைவாக தெரிகிறார் என்று இதற்கு கருத்து தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version